கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உடல் மெலிந்து.. அழுகி பலியானது.. கோவையில் அடுத்தடுத்து 4 யானைகள் மரணம்.. அதிர வைக்கும் மர்மம்!

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் அடுத்தடுத்து 11 நாட்களில் நான்கு யானைகள் பலியானதும், அதில் 3 யானைகள் வெறும் இரண்டு நாட்களில் பலியானாதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை செய்யப்பட்டது. கேரளாவில் மன்னார்காடு காட்டுப்பகுதியில் உள்ள பாலக்காடு மாவட்டத்திற்கு கீழே வரும் வெள்ளியார் நதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது .

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கோவையில் அடுத்தடுத்து 4 யானைகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணம் என்ன என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

அரசனைப் போல வாழ்க்கை அமைய வேண்டுமா - இன்று ஆனி கேட்டை முருகனை வழிபடுங்கஅரசனைப் போல வாழ்க்கை அமைய வேண்டுமா - இன்று ஆனி கேட்டை முருகனை வழிபடுங்க

எங்கே நடந்துள்ளது

எங்கே நடந்துள்ளது

மேட்டுப்பாளையம்:சிறுமுகை காட்டுப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பகுதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து யானைகள் வருவது வழக்கம். சத்தியமங்கலம் காடு தொடங்கி பவானிசாகர் காட்டுப்பகுதி வரை பல்வேறு காட்டுப்பகுதியில் இருந்து இங்கே யானைகள் வருவது உண்டு. 50க்கும் அதிகமான யானைகள் இங்கே எப்போதும் காணப்படும்.

அதிக பாதுகாப்பு

அதிக பாதுகாப்பு

யானைகளுக்கு அதிக பாதுகாப்பான காட்டுப்பகுதியாக இந்த வனப்பகுதி திகழ்ந்து வந்தது. இந்த நிலையில்தான் இந்த காட்டுப்பகுதியில் அடுத்தடுத்து 11 நாட்களில் நான்கு யானைகள் பலியானதும், அதில் 3 யானைகள் வெறும் இரண்டு நாட்களில் பலியானாதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் மூன்று பெண் யானைகள் இறந்துள்ளது. அதேபோல் நான்கு ஆண் யானைகள் இறந்துள்ளது.

வயது

வயது

இதில் இரண்டு யானையின் வயது 24 மற்றும் 25. இன்னொரு யானையின் வயது 17. வேறு ஒரு யானையின் வயது 48 ஆகும். இந்த யானைகள் எப்படி பலியானது என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த யானையின் மரணம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அனைத்து யானைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இறந்து உள்ளது. இந்த யானைகள் உடல் மெலிந்து இறந்துள்ளது.

Recommended Video

    ஆவேசமான சிறுவன்.. எஸ்ஐ சட்டையை பிடித்ததால் பரபரப்பு.. கோவையில்!
    என்ன காரணம்

    என்ன காரணம்

    அதேபோல் இந்த யானைகளுக்கு இடையில் சிகிச்சை அளித்தும் கூட அது பலன் அளிக்கவில்லை. இந்த யானையில் மொத்தம் 3 யானைகளின் உடல் அழுகி போய் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எல்லா யானைகளும் உயிருக்கு போராடி பலியாகி உள்ளது. இப்படி யானைகள் கோவையில் தொடர்ந்து பலியாகும் சம்பவம் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    English summary
    4 elephant died in 11 days in Coimbatore creates new doubts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X