கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகள் கஷ்டப்படறாளே.. கலங்கி தவித்த அம்சவேணி.. விஷ சோறு போட்ட விபரீதம்.. மயங்கி விழுந்த ஐவர்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்

Google Oneindia Tamil News

கோவை: "என் மகள் கஷ்டப்படறதை எங்களால பார்க்க முடியல.. அவளுக்கு வைத்தியம் செய்யவும் எங்களால முடியல" என்று சாப்பாட்டில் விஷம் கலந்து தற்கொலை செய்ய ஒரு குடும்பமே முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் கோவிந்தராஜ். இவரது மனைவி அம்சவேணி. இவர்களுக்கு சௌமியா, சத்யபிரியா, மணிகண்டன், சபரிநாதன், என்ற 4 குழந்தைகள் உள்ளனர்.

5 members in a same family attempt suicide near coimbatore

வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் குடும்பம் இது.. இதில் சத்யபிரியா என்பவர் 2-வது மகள்.. நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள்.. இவளது சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் குடும்பமே கஷ்டப்பட்டு வந்துள்ளது.

அண்ணியும்.. மைத்துனனும் சேர்ந்து.. காட்டி கொடுத்த கண்ணாடி வளையல்.. இப்ப ஜெயிலில்! அண்ணியும்.. மைத்துனனும் சேர்ந்து.. காட்டி கொடுத்த கண்ணாடி வளையல்.. இப்ப ஜெயிலில்!

குடும்பம் நடத்தவே போதிய வருமானம் இல்லாத நிலையில், மருத்துவ செலவுக்கு இந்த தம்பதியினர் தவித்துள்ளனர்.. மகளுக்கு வைத்தியம் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் இந்த தம்பதிக்கு அதிகமாகவே வாட்டத்தையும், கண்ணீரையும் தந்து வந்துள்ளது.

இந்நிலையில், கோவிந்தராஜ் வெளியே சென்றிருந்தபோது அம்சவேணி 4 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்யது கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதனால், அரளி விதையை அரைத்து அதை சாப்பாட்டில் கலந்து பிள்ளைகளுக்கும் தந்து, தானும் சாப்பிட்டுள்ளார்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. திடீரென அம்சவேணிக்கு மனசு மாறிவிட்டது.. உடனே குழந்தைகளை ஒரு ஆட்டோவில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.. இப்போது அம்சவேணி உட்பட 5 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அம்சவேணி சாப்பாட்டில் விஷம் கலந்து குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
5 members in a same family attempt suicide for no money to daughters treatment near coimbatore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X