கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அபர்ணாவிடம் 60 வயசு தாத்தா பண்ண வேலை.. செல்பியை காட்டி மிரட்டல்.. கைது செய்த போலீஸ்

செல்பியை காட்டி ரூ.5 லட்சம் பறிக்க முயன்ற முதியவர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண்ணிடம் செல்பியை வைத்து மிரட்டி 5 லட்சம் பணம் கேட்ட 60 வயது தாத்தா -வீடியோ

    கோவை: அபர்ணாவிடம் 60 வயசு தாத்தா பண்ண வேலையை பார்த்தீங்களா.. செல்பியை காட்டி மிரட்டி 5 லட்சம் பணம் கேட்டுள்ளார்!

    அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூரை சேர்ந்தவர் அபர்ணா. 26 வயது பெண்ணான இவர் ஐடிஐ முடித்து உள்ளார். 3 வருஷத்துக்கு முன்பு இவரது கழுத்தில் இருந்த செயின் காணாமல் போய்விட்டது. அதனால் வீட்டுக்கு போனால் சரமாரியாக பெற்றவர்கள் திட்டுவார்களே என்று பயந்து, பஸ் ஸ்டாப்பிலேயே நின்று அழுது கொண்டு நின்றிருக்கிறார்.

    60 year old Man arrested near Coonoor

    அப்போதுதான் இந்த தாத்தா அங்கு வந்தார். இவர், குன்னூரை சேர்ந்த இவர் விவசாயம் செய்கிறார். பெயர் நஞ்சுண்டன். அபர்ணா அழுவதை பார்த்ததும், ஆறுதல் சொல்லி தேற்றினார். பெரிய மனுஷன் ஆறுதல் சொல்லவும், அபர்ணாக்கு அவர் மீது ஒரு மரியாதை வந்துவிட்டது.

    மேலும், நஞ்சுண்டன் அபர்ணாவை அவரது வீட்டுக்கே அழைத்து சென்று நகை காணாமல் போனது பற்றி எடுத்து சொன்னார். இந்த சம்பவத்தில் இருந்து அபர்ணா குடும்பத்துடன் நஞ்சுண்டனுக்கு நெருக்கம் அதிகமானது. அப்படித்தான் இந்த தாத்தா தன் வீட்டுக்கு வரும்போதெல்லாம், அவருடன் சேர்ந்து அபர்ணா நிறைய செல்பிகள் எடுத்து தள்ளி உள்ளார்.

    கடைசியில், அபர்ணாவுக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு 2 லட்சம் செலவாகும் என்று நஞ்சுண்டன் சொல்லவும், 2017-ல், பெற்றோரும் அந்த பணத்தை தந்தனர். ஆனால் நாள் ஆக ஆக.. வேலை வரவே இல்லை. பணத்தை கேட்டாலும் திருப்பி தரவில்லை நஞ்சுண்டன்.

    எங்களுக்குள் சண்டை இல்லை.. நிம்மதியும் இல்லை.. அதனால இப்படி ஒரு முடிவு... ஜெரினாவின் பகீர் கடிதம்எங்களுக்குள் சண்டை இல்லை.. நிம்மதியும் இல்லை.. அதனால இப்படி ஒரு முடிவு... ஜெரினாவின் பகீர் கடிதம்

    தொடர்ந்து பெற்றோர் பணம் கேட்கவும், "திரும்ப திரும்ப பணம் கேட்டால், அபர்ணாவுடன் சேர்ந்து எடுத்த செல்பியை சோஷியல் மீடியாவில் போட்டு, எனக்கும், அவளுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்வேன். நான் இந்த செல்பிகளை வெளியே விடாமல் இருக்கணும்ன்னா எனக்கு நீங்க 5 லட்சம் ரூபாய் தரணும்" என்று மிரட்டினார்.

    அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார், நஞ்சுண்டனை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.

    English summary
    60 year old man threatening young woman for money and arrested by Annoor Police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X