கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உனக்கு ஓகேவா.. எனக்கு பிடிச்சிருக்கு".. தாத்தாவின் சேட்டை.. சிறுமிக்கு "லெட்டர்".. தூக்கிய போலீஸ்!

16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் தந்த 66 வயது முதியவர் கைதானார்

Google Oneindia Tamil News

கோவை: "எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.. உனக்கு ஓகே வா" என்று கேள்வி கேட்டு, சிறுமிக்கு லவ் லட்டரும் தந்த முகமது தாத்தாவை தூக்கி உள்ளே வைத்துள்ளனர் நம் போலீசார்!!
கோவை அடுத்த போத்தனூர் அருகே பஜன கோயில் தெருவில் வசிப்பவர் முகமது பீர் பாஷா.. இவருக்கு 66 வயதாகிறது.. இதே பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார்.

சிறுமியை அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் முகமது தாத்தாவுக்கு சபலம் ஏற்பட்டு வந்துள்ளது.. அதனால் இதை மனசுக்குள்ளேயே பூட்டி வைக்க அவருக்கு விருப்பமில்லை.. உடனே ஒரு லவ் லட்டர் எழுதினார்.. "எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.. உனக்கு ஓகே வா" என்று ஸ்டெரியிட்டா விஷயத்துக்கு வந்தார்.

 66 year old man arrested for giving love letter to 16 year old girl in coimbatore

அந்த லட்டரை கொண்டுபோய் சிறுமியிடம் தந்தார்.. அந்த சிறுமியோ அதை எடுத்து கொண்டு போய் அவரது அம்மாவிடம் தந்துள்ளார்.. அவரது அம்மாவோ மொத்த சொந்தக்காரர்களையும் வரவழைத்து லட்டரை காட்டினார்.. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், முகமது தாத்தாவை சந்தித்து கண்டித்துள்ளனர்.. ஆனால் தாத்தா அதை காதிலேயே வாங்கவில்லை..

திரும்பவும் சிறுமியை சந்தித்து, "நான் தந்த லட்டருக்கு என்ன பதில்?" என்று கேட்டு மிரட்டி உள்ளார்.. அவர் மிரட்டிவிட்டதால் பயந்துபோன சிறுமி வீட்டுக்குள் போய் ஒளிந்துகொண்டார்.. முகமதுக்காக வீட்டை விட்டு வெளியே வராமலேயே இருந்திருக்கிறார்.

திணறும் திமுக.. யார் சொல்வதை கேட்பது.. திணறும் திமுக.. யார் சொல்வதை கேட்பது.. "இவரா.. அவரா".. அதிருப்தியில் சீனியர்கள்..!

இப்படியே விட்டால் சரிப்படாது என்று நினைத்த சிறுமியின் பெற்றோர், மகளிர் போலீசில் புகார் தந்தனர்.. இந்த புகாரை போலீசார் விசாரித்ததில், சிறுமியை மிரட்டியது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன், கொத்தாக கொண்டு போய் முகமது தாத்தாவை ஜெயிலில் வைத்துள்ளனர் போலீசார்!

English summary
66 year old man arrested for giving love letter to 16 year old girl in coimbatore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X