கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை டூ கோவை.. விமானத்தில் வந்த 24வயது பயணிக்கு கொரோனா.. 93 பேர் விமானத்தில் இருந்ததால் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

கோவை: விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய முதல் நாளில் சென்னையில் இருந்து கோவைக்கு இண்டிகோ விமானத்தில் சென்ற 24 வயது பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    விமானம் மூலம் கோவை வந்த இளைஞருக்கு கொரோனா!

    அவரோடு சேர்ந்த பயணித்த மேலும் சில பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி இன்னும் சில பயணிகளின் சோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

    சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த 25ம் தேதி 93 பயணிகள் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்திருந்தனர். இதில் பயணித்த 24 வயது பயணிக்கு கோவையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கொரோனா தடுப்பூசி அப்பேட்.. குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி.. மனிதர்களுக்கும் பரிசோதனை கொரோனா தடுப்பூசி அப்பேட்.. குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி.. மனிதர்களுக்கும் பரிசோதனை

    யாரும் அமரவில்லை

    யாரும் அமரவில்லை

    இதைத் தொடர்ந்து, இந்த விஷயத்தில் இண்டிகோ நிறுவனம் ஒரு அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் " நோயாளி தற்போது கோயம்புத்தூரில் உள்ள இஎஸ்ஐ மாநில மருத்துவ மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மற்ற பயணிகளைப் போலவே முகமூடி, முகம் கவசம் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கொண்டு அவர் விமானத்தில் விமானத்தில் அமர்ந்திருந்தார். கூடுதலாக, அவருக்கு அருகில் வேறு யாரும் அமரவில்லை, இதனால் பரவுவதற்கான சாத்தியத்தை கணிசமாகக் குறைத்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    93 பேரும் தனிமையில்

    93 பேரும் தனிமையில்

    இதற்கிடையே 24 வயது பயணியுடன் பயணித்த அனைத்து பயணிகளும் 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாவும்,. அரசாங்க வழிகாட்டுதல்களின்படி மற்ற பயணிகளுக்கு கொரோனா தொற்று குறித்த தகவலை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தனிமை முகாம் கட்டாயம்

    தனிமை முகாம் கட்டாயம்

    இதனிடையே கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள கோவை விரைவில் பசுமை மண்டலமாக மாறவிருந்தது, இந்த சூழலில் கோயம்புத்தூருக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் -பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அனைத்து பயணிகளும் கொரோனா வைரஸுக்கு சோதிக்கப்படுவார்கள் என்றும் முடிவுகள் வெளிவரும் வரை, அவர்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தலுக்கோ அல்லது ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கோ தேர்வு செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விமானத்தில் பயணித்தவர்

    விமானத்தில் பயணித்தவர்

    இதனிடையே ஏர் இந்தியாவின் டெல்லி-லூதியானா விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த அனைவரும் தனிமை படுத்துதல் முகாமில் வைக்கப்பட்டனர். அடுத்தடுத்து விமானத்தில் பயணித்த இரண்டு பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது மற்ற பயணிகளிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

    English summary
    a 24-year-old passenger who took the Chennai-Coimbatore IndiGo flight tested positive for the coronavirus, with test results of a few other passengers being awaited as of Tuesday evening. According to people aware of the flight details, 93 passengers had travelled in the flight
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X