கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாந்தி வந்தா சொல்லுங்க.. கேரி பேக் தரேன்.. புளிப்பு மிட்டாயும் தரேன்.. சபாஷ் கன்டக்டர்

Google Oneindia Tamil News

Recommended Video

    பொதுமக்களிடம் அன்பாக பேசும் அரசு கன்டக்டர்

    கோவை: மதுரையிலிருந்து கோவை அருகே பொதுமக்களிடம் அன்பாக பேசும் பஸ் நடத்துநருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

    ஏ சாவுகிராக்கி, சில்லறையை கொடு... என் தாலிய அறுக்கவே வரானுங்க.. செத்து தொலைய போற மேல ஏறு.. இதுதான் பெரும்பாலும் ஒரு சில நடத்துநர்களின் பாஷையாக இருக்கும். 10 ரூ டிக்கெட்டுக்கு 50 ரூ கொடுத்தால் கூட ஏன் சில்லறை கொடுக்க மாட்டீர்களா என்பார்.

    சில்லறை இருந்தாலும் வேண்டுமென்றே அப்பறம் தரேன் கேள் என கூறி அவர் போகும் போதும் வரும் போதும் மிச்சக் காசை கொடுப்பாரா கொடுப்பாரா என பார்த்து வருவதும் நடக்கத்தான் செய்கின்றன.

    சில்லறையை பிடி

    சில்லறையை பிடி

    நம்மிடம் சில்லறை இல்லாவிட்டால் தேடுவதற்குள் பொரிந்து தள்ளிவிடுவார். ஆனால் அவரிடம் மிச்ச காசை கேட்டால் போதும் ஆமாம் நீ கொடுக்கற காசை வச்சு நான் அப்படியே வீடு கட்டிடுவேனு பாரு... இந்த புடி சில்லறையை என்பார்.

    3 வயது குழந்தை

    3 வயது குழந்தை

    இவர்களாவது பரவாயில்லை. சிவகங்கை மாவட்டம் ராஜகுடியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி தனது 3 வயது குழந்தையுடன் இளையான்குடி அரசு பஸ்ஸில் ஏறியதும் தூங்கியதால் டிக்கெட் எடுக்க மறந்துவிட்டார்.

    வைரலான வீடியோ

    வைரலான வீடியோ

    சிறிது தூரம் சென்றவுடன் டிக்கெட் பரிசோதகர் சோதனையில் லட்சுமி டிக்கெட் எடுக்காதது தெரியவந்தது இதையடுத்து அந்த பேருந்தின் நடத்துநர் பூமிநாதனுக்கு மெமோ கொடுத்தனர். அவர்கள் சென்றதும் பேருந்தில் இருந்து இறங்கிய பெண்ணின் பின்னால் சென்ற கன்டக்டர், குழந்தை கண் முன்னே அடித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எந்த குப்பை

    எந்த குப்பை

    இந்நிலையில் மதுரை- கோவை பேருந்தின் கன்டக்டர் ஒருவர் தற்போது வைரலாகி வருகிறார். அவர் வாயை திறந்தாலே நல்ல வார்த்தைகளாகவே உதிக்கிறது. பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகள் முன்பு அவர் பேசுகையில் பஸ்ஸில் எந்த குப்பையையும் உள்ளே போடாமல் சுத்தமாக வைத்திருங்கள்.

    புளிப்பு மிட்டாயும்

    புளிப்பு மிட்டாயும்

    வாந்தி வந்தா சொல்லுங்க. நான் கேரி பேக் தரேன்.. புளிப்பு மிட்டாயும் தரேன்.. அப்படியே பயண கட்டணத்தை தெரிந்து கொள்ளுங்கள். மதுரையிலிருந்து ஒட்டன்சத்திரத்துக்கு ரூ 82, தாராபுரத்துக்கு ரூ.115, பல்லடத்துக்கு ரூ 146, சூலூர் ரூ161, கோவைக்கு ரூ170 ஆகும்.

    கை கூப்பி வணக்கம்

    முடிந்தவரை சில்லறையாகவே கொடுத்து உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நோக்கத்துடன் பயணம் செய்கிறீர்கள். உங்களது பயணம் இனிதாகவும் வெற்றிகரமானதாகவும் முடிய தமிழக போக்குவரத்து கழகம், கோவை கோட்டம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி கைகூப்பி கும்பிடுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    English summary
    A Conductor in Coimbatore wishes all the passengers for their happy journey and he also advised to keep the bus clean.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X