கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடும்பம் நடத்த மறுத்த சுமதி.. புத்தி சொல்லாத விசாலாட்சி.. இருவரையும் கொன்று தற்கொலை செய்த பாபு

Google Oneindia Tamil News

Recommended Video

    மனைவி மற்றும் மாமியாரைக் கொலை செய்துவிட்டு தச்சு தொழிலாளி தற்கொலை-வீடியோ

    கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் மாமியாரைக் கொலை செய்துவிட்டு தச்சு தொழிலாளி தானும் தற்கொலை செய்துகொண்டார்.

    பொள்ளாச்சி கோட்டூர் ரோடு CTC காலனியில் சுமதி என்பவருக்கும், தச்சுத் தொழிலாளியான பாபு என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

    தமிழினத்தின் பேராசான் நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு 100 நாட்கள்.. ஸ்டாலின் நெகிழ்ச்சி தமிழினத்தின் பேராசான் நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு 100 நாட்கள்.. ஸ்டாலின் நெகிழ்ச்சி

    தகராறு

    தகராறு

    இருவருக்கும் குழந்தை இல்லாத நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த சுமதி, தாய் விசாலாட்சியுடன் வசித்து வந்தார். பாபு அடிக்கடி சுமதியின் வீட்டுக்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு சுமதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

    கொடூரம்

    கொடூரம்

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டுக்குள் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்ற பாபு, சுமதி மற்றும் அவரது தாயார் விசாலாட்சியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

    தற்கொலை

    தற்கொலை

    மேலும் அந்த வீட்டிலேயே பாபு கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீஸார் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    மேலும் கொலை மற்றும் தற்கொலை குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். குடும்பம் நடத்த மனைவியை அழைத்த நிலையில் அதற்கு ஆதரவளிக்காத மாமியாரையும் சேர்த்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A man kills his wife and mother in law after wife refused to go with him. After that he commits suicide. This happens in Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X