கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊரடங்கில் தமிழக அரசு அளித்த தளர்வுகள் என்னென்ன? இன்றைக்கு நம்மூர் நகரங்களில் நிலை என்ன?

Google Oneindia Tamil News

கோவை: 25 மாவட்டங்களுக்கு அரசு ஊரடங்கில் பெரும் தளர்வு அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட பேருந்து போக்குவரத்து மட்டும் தான் இல்லை. மற்றபடி பெரும்பாலான வணிகங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மக்கள் வழக்கம் போல் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டனர்.

லாக்டவுனை அரசு நீட்டித்துள்ள போதிலும் கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு நிறைய தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது.

என்னென்ன தளர்வுகளை அறிவித்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம்: அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் tn-e pass இல்லாமல் இயக்க தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும் (வாகன ஓட்டுநர் தவிர) செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு எதிரொலி.. சென்னையில் இன்று முதல் 200 அரசு பஸ்கள் இயக்கம் ஊரடங்கு தளர்வு எதிரொலி.. சென்னையில் இன்று முதல் 200 அரசு பஸ்கள் இயக்கம்

வாடகை கார்களுக்கு அனுமதி

வாடகை கார்களுக்கு அனுமதி

மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் இ பாஸ் இல்லாமல் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தம் பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தலாம் என்று அரசு அறிவித்தது.

100 சதவீதம் அனுமதி

100 சதவீதம் அனுமதி

தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் - தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளித்தது. சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்களும், 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில், 100 சதவீதம் பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில், 50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு தேர்வு திருத்தம்

12ம் வகுப்பு தேர்வு திருத்தம்

ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்களிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில் இ பாஸ் உடன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்று வர பயன்படுத்தப்படும் டாக்ஸி, ஆட்டோவுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களுக்கு பயணம்

பல இடங்களுக்கு பயணம்

பல தொழிற்சாலைகள் நிறைந்த கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அனுமதித்த தொழிற்சாலைகளில் வழக்கம் போல் பணிகள் தொடங்கிவிட்டன. கடைகளும் நிறைந்த திருந்து இருந்தன. மக்கள் வேலைகளுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இதனால் இதுவரை அமைதியாக இருந்த பல சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. நகரங்களில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் பிஸியாக மாறிவிட்டன. சில சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பணிக்கு திரும்பினர்

பணிக்கு திரும்பினர்

இன்று முதல் 50 சதவீதம் அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தால் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்காக ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த பேருந்துகள் பல்வேறு ஊர்களில் உள்ள அரசு அலுவலங்களுக்கு புறப்பட்டு சென்றன. இதேபோல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும் என்று அரசு அறிவித்து இருந்ததால் ஆசிரியர்கள் சிறப்பு பேருந்துகள் மூலம் மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு சென்றனர். சென்னையில் ஆவடி, தாம்பரம், திருவெற்றியூர், திருவான்மியூர் , பெரம்பூர் உள்பட 34 வழித்தடங்களில் அரசு ஊழியர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

மக்கள் மகிழ்ச்சி

மக்கள் மகிழ்ச்சி

பல நாட்களுக்கு பிறகு இன்று நிறைய கடைகள் திறக்கப்பட்டிருந்த. ஓட்டல்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது. பொதுமுடக்கத்தால் வீடுகளுக்குள் முடங்கிகிடந்த மக்கள் இப்போது வழக்கம் போல் விரும்பிய இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர். அரசு அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டுமே வெளியில் செல்ல பயன்படுத்த வேண்டும் என்று கூறிய நிலையில். மக்கள் இதுநாள் அடக்கி வைத்திருந்த ஆசைகளை வெளிப்படுத்தும் விதமாக விரும்பிய இடங்களுக்கு மாவட்டங்களுக்குள்ளேயே சென்று வருகிறார்கள்.

கூண்டில் இருந்து ரிலீஸ்

கூண்டில் இருந்து ரிலீஸ்

அரசு இந்நேரம் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு மாவட்டங்களுக்குள் உள்ளவர்களுக்காவது அனுமதி அளித்திருந்தால் கூட லட்சம் பேர் குவிந்திருப்பார்கள். ஆனால் அரசு அனுமதி அளிக்கவில்லை. ஏன் இதை சொல்கிறேன் என்றால், அந்த அளவிற்கு மக்கள் லாக்டவுனால் மன இறுக்கத்தில் தவித்தனர். கூண்டை உடைத்து பறந்த பறவை போல் ஒவ்வொரும் இன்று சீரிப்பாய்ந்ததை காண முடிநத்து. பலரும் முககவசம் அணிந்தபடியே பயணித்தனர். பெரிய வணிக வளாகங்கள், தியேட்டர்கள், சலூன்கள் ,. மிகப்பெரிய ஜவுளி கடைகள் மட்டுமே மூடப்பட்டிருந்தன. டீக்கடைகளும் மூடப்பட்டே இருக்கின்றன. அரசு பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளித்ததை டீக்கடைகார்கள் ஏற்கவில்லை. இதனால் மூடியே கிடந்தன. மக்கள் அரசு சொன்னபடி சமூக விலகலை கடைபிடித்தால் கொரோனா இல்லாத தொடுவானம் தொடும்தூரம் அருகில் வரும்.

English summary
after lockdown 4.0, many cites of tamil nadu going normal life heavy traffic some areas of coimbatore, tirupur , erode and salem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X