கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்ததால் பரபரப்பு!

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் மத்திய பாஜக அமைச்சர் பியூஷ் கோயலை அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டாக சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. அதிமுகவை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் சதி இது என்கிறது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு.

அதிமுக ஒற்றை தலைமைக்கான தலைவர் இபிஎஸ் தான்! இன்றைய எழுச்சி திமுகவுக்கான சாவு மணி! எஸ்பி வேலுமணி பரபர அதிமுக ஒற்றை தலைமைக்கான தலைவர் இபிஎஸ் தான்! இன்றைய எழுச்சி திமுகவுக்கான சாவு மணி! எஸ்பி வேலுமணி பரபர

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரு கோஷ்டிகளிடையே பகிரங்கமாக மோதல் வெடித்தது. அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்ட 30 நிமிடங்களிலேயே முடிவடைந்தது. அப்பொதுக்குழுவில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அக்கூட்டத்தில் ஓபிஎஸ் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டார் என்பது அவரது ஆதரவாளர்கள் குமுறக்

ஜூலை 11-ல் பொதுக்குழு

ஜூலை 11-ல் பொதுக்குழு

அதிமுகவின் புதிய பொதுக்குழு ஜூலை 11-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பொதுக்குழு சட்டப்படி செல்லாது; அப்படி ஒரு பொதுக்குழு நடைபெறாது என்கிறது ஓபிஎஸ் தரப்பு. அதிமுகவின் இருதரப்பும் மாறி மாறி கருத்துகளை வீசி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அன்றைய தினம் ஈபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவது உறுதி எனவும் கூறப்படுகிறது.

கோவையில் பியூஷ் கோயல்

கோவையில் பியூஷ் கோயல்

இந்நிலையில் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வருகை தந்திருந்தார். அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் டெல்லியில் தலையிட்டு வந்தவர் பியூஷ் கோயல். இந்த பின்னணியில் முன்னாள் அமைச்சர் கோவை எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டாக பியூஷ் கோயலை நேரில் சந்தித்து பேசினர்.

கோவை எஸ்பி வேலுமணி சந்திப்பு

கோவை எஸ்பி வேலுமணி சந்திப்பு

இச்சந்திப்பின் போது எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில், கோவை மண்டலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன. குஜராத்தின் அகமதாபாத்தில் ஜவுளி சந்தை அமைக்கப்பட்ட போது சோமனூர் அல்லது பல்லடம், காரணம்பேட்டையில் ஜவுளி சந்தை ஒன்றை அமைக்க வேண்டும்; ஜவுளி தொழில் மேம்பாட்டுக்கு மின்சார மானியம் வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இச்சந்திப்பு மரியாதை நிமித்தமானது என கூறப்பட்டாலும் ஈபிஎஸ் தரப்பு, டெல்லி பாஜக மேலிடத்துடனான உறவுகளை வலுப்படுத்திக் கொண்டே இருக்கிறோம் என்பதை ஓபிஎஸ் கோஷ்டிக்கு வெளிப்படுத்தும் வகையிலானது எனவும் கூறப்படுகிறது. பியூஷ் கோயலுடனான இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

English summary
AIADMK's EPS Faction SP Velumani and MLAs met Union Minister Piyush Goyal at Coimbatore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X