கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வச்ச குறி தப்பவில்லை.. பாக். தீவிரவாதி முகாம்கள் காலி.. கோவையில் விமானப்படை தளபதி பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    வச்ச குறி தப்பவில்லை.. கோவையில் விமானப்படை தளபதி பேட்டி-வீடியோ

    கோவை: பாகிஸ்தானுக்குள், தீவிரவாதிகளை அழிப்பதற்காக குறி வைத்த இலக்கை இந்திய விமானப்படை வெற்றிகரமாக தகர்த்துவிட்டது என்று விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா தெரிவித்தார்.

    கோவை அடுத்த சூலூர் விமானப்படை தளபதி தனோவா இன்று மதியம்,12.30 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    Air Chief Marshal BS Dhanoa: We hit our target

    விமானி, அபிநந்தன் பயன்படுத்திய மிக் 21 பைசன் வகை விமானம் பழமையானது கிடையாது. அது அப்டேட் செய்யப்பட்டது. இதில் சிறந்த ரேடார் சிஸ்டம், விண்ணிலேயே இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டு விட்டன. எனவே எந்த ஒரு போர் விமானத்தையும், மிக் 21 பைசன் எதிர்த்து நிற்கும் திறன் கொண்டதுதான்.

    எனவேதான் பாகிஸ்தானின் நவீனமான எப் 16 போர் விமானத்திற்கு எதிராக மிக் -21 பைசன் பயன்படுத்தப்பட்டது.

    அபிநந்தன் மீண்டும் போர் விமான பைலட்டாக பணியில் சேர முடியுமா? விமானப்படை தளபதி விளக்கம் அபிநந்தன் மீண்டும் போர் விமான பைலட்டாக பணியில் சேர முடியுமா? விமானப்படை தளபதி விளக்கம்

    பாகிஸ்தானுக்குள் தீவிரவாதிகளின் முகாம்களை சரியாக நமது போர் விமானங்கள் தாக்கி அழித்து உள்ளதாகவே எங்களுக்கு தகவல் வந்துள்ளது. முகாம்களில் எத்தனை தீவிரவாதிகள் இருந்தனர் என்பதை கணிக்க முடியும். ஆனால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது தொடர்பாக விமானப்படை கணக்கிட முடியாது. இலககு சரியாக குறி வைத்து தாக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்.

    இந்திய விமானப்படை சரியாக தாக்கியதால்தான் இப்போது பாகிஸ்தான் தரப்பு தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்தியா, எங்கோ காட்டுக்குள் குண்டு வீசியிருந்தால் பாகிஸ்தான் நம்மை தாக்க முயற்சிக்க வேண்டிய தேவையே கிடையாதே.

    இந்திய போர் விமானங்கள் இலக்கை சரியாக தாக்கவில்லை, என்று கூறுவோருக்கு அந்த விவரம் எங்கே இருந்து கிடைத்தது என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு கிடைத்த தகவல்படி இந்திய போர் விமானங்கள் சரியான இலக்கை தாக்கி அழித்து விட்டு திரும்பியுள்ளன.

    வரும் செப்டம்பர் மாதம் ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும்.

    English summary
    Air Chief Marshal BS Dhanoa on air strikes: The target has been clearly amplified by FS in his statement. If we plan to hit the target, we hit the target, otherwise why would he (Pak PM) have responded, if we dropped bombs in the jungles why would he respond.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X