கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டிடிவி தினகரன்

Google Oneindia Tamil News

Recommended Video

    தொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்..நம்பிக்கை தளராத டிடிவி தினகரன் | TTV Dinakaran

    கோவை: தொண்டர்களையும், இறைவனையும் தவிர வேறு யாருக்கும் தான் அஞ்சமாட்டேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், ஒரு தேர்தலில் தோல்வியை தழுவியதற்காக அமமுக அழிந்துவிடும் என பகல் கனவு காணவேண்டாம் என்றும், மீண்டு எழுந்து சாதனை படைக்கும் எனவும் தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

    ammk general secratary ttv dinakaran discuss with party cadres

    சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே அமமுகவின் இலக்கு என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அனுபவமாக எடுத்துக்கொண்டதாகவும் கூறினார். அமமுகவுக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவை யாராலும் தடுக்க முடியாது எனப் பேசிய தினகரன், வரும் சட்டமன்றத் தேர்தலில் அமமுகவை மக்கள் ஆட்சியில் அமர்த்துவார்கள் எனத் தெரிவித்தார்.

    சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபசி தஹில் ரமாணி மீது முறைகேடு புகார்.. சிபிஐ விசாரிக்க உத்தரவுசென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபசி தஹில் ரமாணி மீது முறைகேடு புகார்.. சிபிஐ விசாரிக்க உத்தரவு

    தன்னை அரசியல் பொதுவாழ்வில் அறிமுகம் செய்தவர் ஜெயலலிதா என்றும், இறைவனையும், தொண்டர்களையும் தவிர வேறு யாருக்கும் இந்த உலகத்தில் பயப்படமாட்டேன் எனவும் தினகரன் தெரிவித்தார். சுயநலத்திற்காக சிலர் கட்சியில் இருந்து வெளியேறி வருவதாகவும், அதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் பேசினார்.

    இதனிடையே அந்தக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, ரெங்கசாமி, உடுமலை சண்முகவேல், மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    English summary
    ammk general secratary ttv dinakaran discuss with party cadres
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X