கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரிவாளுடன் விரட்டிய கயல்விழி.. தெறித்து ஓடிய திருடர்கள்.. கோவை அருகே தில் பெண்.. குவியும் பாராட்டு!

Google Oneindia Tamil News

கோவை: கொள்ளையர்களை பார்த்ததும், அரிவாளை தூக்கி கொண்டு விரட்டி ஓடிய கயல்விழிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கோவையை அடுத்த துடியலூர் அருகே பன்னிமடை ஸ்ரீவாரி கார்டன் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வரும் தம்பதி சீனிவாச பிரபு - கவிதா ஆவர். கவிதா, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தம்பதி இருவரும் வேலை முடிந்து, அவர்கள் சொந்த ஊரான தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினத்துக்கு சென்றுவிட்டார்கள்.

காட்டு யானைகள்

காட்டு யானைகள்

அதனால் சீனிவாச பிரபு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் 2 பேர் நள்ளிரவு 2 மணிக்கு பைக்கில் வந்தார்கள். பூட்டிய வீட்டின் முன்பு நின்றுகொண்டு கொஞ்ச நேரம் வீட்டையும், தெருவையும் நோட்டமிட்டார்கள். ஏனென்றால் அந்த பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் வருமாம். அப்படி யானைகள் வந்துவிட்டால் தெருநாய்கள் ஒன்றுகூடி குரைக்குமாம்.

கயல்விழி

கயல்விழி

ஆனால் காட்டு யானைகள் வராமலேயே நாய்கள் இவர்கள் இருவரை பார்த்ததும் குரைக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் பக்கத்து வீட்டில் வசிக்கும் கயல்விழி என்பவர் தூக்கம் கலைந்து எழுந்து வந்து பார்த்தார். கயல்விழிக்கு 42 வயதாகிறது. கவிதாவின் நெருங்கிய தோழியும் கூட.

கணவரை எழுப்பினார்

கணவரை எழுப்பினார்

தெரு நாய்கள் எல்லாம் சேர்ந்து குரைக்கவும் யானைகள்தான் வந்துவிட்டது என்று நினைத்து தன் வீட்டின் முன்னாடி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தார். அப்போதுதான் 2 பேர் கவிதா வீட்டின் கதவை உடைத்து கொண்டு செல்வதை பார்த்தார். உடனே கயல்விழி, கவிதாவுக்கு போன் செய்து சொன்னதுடன், தூங்கி கொண்டிருந்த கணவரையும் எழுப்பினார்.

வாசற்படியில் கயல்விழி

வாசற்படியில் கயல்விழி

பிறகு வீட்டில் இருந்த அரிவாளை தூக்கி கொண்டு ஓடிவந்தார். திருடன் திருடன் என கத்தி கொண்டே கவிதா வீட்டு அருகில் சென்றார். அரிவாளுடன் ஆவேசத்துடன் வீட்டு வாசற்படியில் வந்து நின்ற கயல்விழியை பார்த்ததும், வீட்டிற்குள் நின்றிருந்த 2 திருடர்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பைக்கை எடுக்கவில்லை

பைக்கை எடுக்கவில்லை

அதனால் வெளியே தலைதெறிக்க ஓடிவந்து தப்பி போக முயன்றனர். அப்போதும் அரிவாளை தூக்கி கொண்டு கயல்விழி அவர்களை விரட்டி கொண்டே ஓடினார். வெளியே தப்பி ஓடிவந்தும் அரிவாளை கயல்விழி கீழே போடாததால், பைக்கை கூட எடுக்காமல் அங்கேயே விட்டுவிட்டு திருடர்கள் ஓடினார்கள். கயல்விழி மற்றும் அவரது விடாமல் துரத்தியும் அவர்களை பிடிக்க முடியவில்லை.

பைக்கில் நகைகள்

பைக்கில் நகைகள்

தகவல் அறிந்த தடாகம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, கவிதா வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, 10 பவுன் நகை அபேஸ் ஆகி இருந்தது தெரியவந்தது. அதனால் வீட்டு வாசலில் நின்றிருந்த பைக்கை சோதனை போட்டால், அதில் எக்கச்சக்கமாக ஏற்கனவே கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் இருந்தன. அதனால் நகைகள், பைக்கை பறிமுதல் செய்தனர். சிசிடிவி கேமராவில் திருடர்கள் யார் என்று பார்த்தால், 2 மணி ராத்திரி என்பதால் அவர்களின் முகம் அதில் சரியாக தெரியவில்லை.

கயல்விழிக்கு பாராட்டு

கயல்விழிக்கு பாராட்டு

இதனிடையே ஊருக்கு போன தம்பதியும் விரைந்து வந்துவிட்டனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை இன்னும் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் திருடர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள் என்றும், ராத்திரி 2 மணி என்றும் தெரிந்தும், கையில் அரிவாளை தூக்கி கொண்டு விரட்டிய கயல்விழிக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.

English summary
Police Appreciate the Kovai woman Kayalvizhi for chased the thieves with the help Scythe
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X