கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1800 போலீசார் குவிப்பு.. அனைத்து இடங்களிலும் ரோந்து.. கோவையில் கூடுதல் பாதுகாப்பு!

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதால் கோவையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Ayodhya Case verdict| அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

    கோயம்புத்தூர்: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதால் கோவையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1800 போலீசார் கோவையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று இன்று வழங்கப்படும் தீர்ப்பில் தெரிந்துவிடும். இந்த வழக்கு இந்தியா வரலாற்றில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    பாபர் மசூதியை கட்டியது முதல் இன்று வரை.. அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதைபாபர் மசூதியை கட்டியது முதல் இன்று வரை.. அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை

    உளவுத்துறை எப்படி

    உளவுத்துறை எப்படி

    மத ரீதியான வழக்கு என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உளவுத்துறை சமூக வலைத்தளங்களை தீவிரமாக கவனித்து வருகிறது.

    தமிழகம் எப்படி

    தமிழகம் எப்படி

    தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். உள்துறை அமைச்சகம் ஏற்கனவே பாதுகாப்பை அதிகரிக்கும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.அதேபோல் கோவையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவை பாதுகாப்பு

    கோவை பாதுகாப்பு

    கோவையில் கோவில்கள், மசூதிகள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ், துணை காவல் படையினர் எல்லோரும் பாதுகாப்பு பணியில் இறங்கி உள்ளனர். 1800 போலீசார் கோவையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை விமான நிலையம்

    கோவை விமான நிலையம்

    கோவை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவையில் கலவரம் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் அதிக எண்ணிக்கையில் போலீசார் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் கூட்டமாக நிற்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Ayodhya Verdict: 1800 polices deployed and Security tightened in Coimbatore, Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X