கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடி வைத்த அதிமுகவினரை கைது செய்யுங்கள்.. ராஜேஸ்வரிக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்.. ரூ.5 லட்சம் நிதி!

கோவையில் அதிமுக கொடி கம்பம் காரணமாக சாலை விபத்தில் காலை இழந்த ராஜேஸ்வரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்

    கோயம்புத்தூர்: கோவையில் அதிமுக கொடி கம்பம் காரணமாக சாலை விபத்தில் காலை இழந்த ராஜேஸ்வரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார். ராஜேஸ்வரிக்கு திமுக தலைவர் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிப்பதற்காக தெரிவித்துள்ளார்.

    கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் அனுராதா ராஜேஸ்வரி இவர் கடந்த வாரம் நீலாம்பூர் அருகே பைக் விபத்தில் சிக்கினார். சாலையோரம் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக் கம்பம் இவர் மீது சாய்ந்து, நிலைதடுமாறி, லாரி மீது மோதினார் அனுராதா ராஜேஸ்வரி.

    இந்த விபத்தில் மோசமாக காயம் அடைந்த அனுராதா ராஜேஸ்வரி கோவையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் ஒரு கால் விபத்து காரணமாக அகற்றப்பட்டுள்ளது.

    நாளை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்... புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்நாளை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்... புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

    கோவை எப்படி

    கோவை எப்படி

    கோவையில் அதிமுக கொடி கம்பம் காரணமாக சாலை விபத்தில் காலை இழந்த ராஜேஸ்வரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். ராஜேஸ்வரிக்கு திமுக தலைவர் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிப்பதற்காக தெரிவித்துள்ளார். இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் பேட்டி அளித்தார். அதில், ராஜேஸ்வரிக்கு தீவிரமாக சிகிச்சை நடந்து வருகிறது

    கால் அகற்றப்பட்டது

    கால் அகற்றப்பட்டது

    ராஜேஸ்வரின் கால் அகற்றப்பட்டது மிகவும் கொடுமையானது. பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ அதிமுக பேனர் விழுந்துதான் பலியானார். அவர் பிராமண வகுப்பை சார்ந்தவர். அதற்கு இன்னும் முழு நீதி கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இவரும் பிராமண வகுப்பை சார்ந்தவர்.

    லாரி ஓட்டுநர்

    லாரி ஓட்டுநர்

    இதற்காக லாரி ஓட்டுனரை கைது செய்துள்ளனர். ஆனால் இதற்கு காரணமான அதிமுகவினரை கைது செய்யவில்லை. இந்த விபத்து நடந்ததே தெரியாது என்று முதல்வர் அலட்சியமாக கூறியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தெரியாது என்று அவர் கூறினார்.

    மீண்டும் சொல்கிறார்

    மீண்டும் சொல்கிறார்

    அதேபோல் மீண்டும் இப்போது சொல்லி இருக்கிறார். அவர் முதல்வராக இருந்து கொண்டு இப்படி பேசுவது கோபம் தருகிறது, அதிர்ச்சி தருகிறது. ராஜேஸ்வரியை காக்க அரசு முயல வேண்டும். இதற்கான முழு செயலையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Banner Death: M K Stalin meets Rajeshwari, Sponsored Rs.5 Lakhs for her treatment in Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X