கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

12 ரூபாய்தான் இருக்கு.. புயல் நிவாரண நிதியா வாங்கிப்பீங்களா.. நெகிழ வைத்த பிச்சைக்காரர்

கஜா புயல் நிவாரணத்துக்கு 12 ரூபாய் தந்திருக்கிறார் பிச்சைக்காரர் ஒருவர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜா புயல் நிவாரணத்திற்கு உதவிய பிச்சைக்காரர்... நெகிழ்ச்சி சம்பவம்- வீடியோ

    கோவை: "என்கிட்ட 12 ரூபாதான் இருக்கு.. வாங்கிப்பீங்களாயா?" என்று கேட்டு புயல் நிவாரண தொகையாக கொடுத்திருக்கிறார் பிச்சைக்காரர் ஒருவர்.

    தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் உதவிகளை செய்து வருகிறார்கள். தனியார் அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள், உட்பட எல்லாருமே நிவாரண பொருட்களை அனுப்பி சேகரித்து அனுப்புகிறார்கள்.

    இப்படித்தான் மேட்டுப்பாளையத்திலும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து நிவாரண பொருட்களை திரட்டி கொண்டிருந்தார்கள். பஸ் ஸ்டேண்டில் இதற்கெனவே ஒரு பந்தல் போடப்பட்டுள்ளது. உதவ விரும்புவர்கள் யார் வேண்டுமானாலும், பணமோ, பொருளோ, சாப்பாடோ என முடிந்ததை கொண்டு போய் இந்த பந்தலில் உள்ள பொறுப்பாளர்களிடம் தந்து கொண்டிருக்கிறார்கள்.

    நல்லா படிக்கிற பொண்ணு.. சிரித்த முகத்துடன் வளைய வரும் கலெக்டர் ரோகிணியே அழுது விட்டாரே! நல்லா படிக்கிற பொண்ணு.. சிரித்த முகத்துடன் வளைய வரும் கலெக்டர் ரோகிணியே அழுது விட்டாரே!

    என்ன வேண்டும்?

    என்ன வேண்டும்?

    2 நாளுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு முதியவர் அந்த பக்கமாக வந்தார். பந்தல் போடப்பட்டு இருப்பதையும், எல்லாரும் உதவி கொண்டு வந்து தருவதையும் கொஞ்ச நேரம் நின்று பார்த்தார். உற்று பார்த்து கொண்டிருப்பதை கவனித்த அங்கிருந்தவர்கள், "ஐயா.. உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்கள்.

    வாங்கிப்பீங்களாயா?

    வாங்கிப்பீங்களாயா?

    அதற்கு அந்த பெரியவர், "நான் ஒரு பிச்சைக்காரன். எனக்கு பிச்சை போட்ட பணத்தில் சாப்பிட்டு விட்டேன். இப்போ என்கிட்ட 12 ரூபாய்தான் இருக்கு. அதை புயல் பாதிச்சவங்களுக்கு தரணும்னு ஆசைப்படறேன். 12 ரூபாயை வாங்கிப்பீங்களாயா?" என்று கேட்டார்.

    சில்லறை காசுகள்

    சில்லறை காசுகள்

    இதை கேட்டதும், அங்கிருந்தவர்களுக்கு ரொம்பவும் நெகிழ்ச்சியாக போய்விட்டது. உடனே, "வாங்கிக்கறோம்.. கொடுங்கய்யா.." என்று சொல்லவும், பையில் வைத்திருந்த சில்லறை காசுகள் உட்பட 12 ரூபாயை பெரியவர் அவர்களிடம் தந்தார். அதன்பிறகு அவர் மெதுவாக அங்கிருந்து நகர தொடங்கினார்.

    முதிர்ந்த வயது

    முதிர்ந்த வயது

    அப்போதுதான் தெரிந்தது, அவர் முதிர்ந்த பிச்சைக்காரர் மட்டும் இல்லை.. அவர் ஒரு மாற்றுத் திறனாளியும்கூட என்று!! இருட்டில் மறையும் வரை எல்லோரும் அவரை பார்த்து கொண்டே சிலையாக நின்றார்கள்.

    English summary
    Beggar given finance aid for Gaja cyclone victims
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X