கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பஸ் சக்கரத்தின் அடியில் சிக்கிய 2 பேர் தலைகள்.. பதற வைக்கும் வீடியோ.. நல்லவேளை.. உயிர்காத்த ஹெல்மெட்

Google Oneindia Tamil News

Recommended Video

    பஸ் சக்கரத்தின் அடியில் சிக்கிய 2 பேர் தலைகள்.. பதற வைக்கும் வீடியோ.. உயிர்காத்த ஹெல்மெட்

    கோவை: பஸ்ஸின் சக்கரத்தின் அடியில் 2 பேர் சிக்கி கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி பதற வைத்து வருகிறது.

    கோவையில் காந்திபுரம் செம பிஸியான பகுதி... எந்நேரமும் நகரின் பஸ் ஸ்டாண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்சுகள் நின்று கொண்டும், சென்று கொண்டும் இருக்கும்.

    bike accident cctv footage in coimbatore

    இந்நிலையில், கிராஸ்கட் ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்டிற்குள் ஒரு பஸ் நுழைய முற்பட்டது.. அந்த நேரம் பார்த்து ஒரு பைக் வேகமாக வந்தது.

    திடீரென பைக்கில் வந்தவர்கள் தடுமாறி கீழே விழுந்தனர்.... ஆனால் அதை கவனிக்காத அந்த பஸ் டிரைவர் அப்படியே வண்டியை திருப்பி ஓட்ட முயற்சித்தார்... இதனால் பைக்கானது, பஸ்ஸின் சக்கரத்துக்கு அடியில் சிக்கி தரதரவென இழுத்துச் சென்றது.

    கேரள அரசு லாட்டரியில் கூலி தொழிலாளிக்கு ரூ.12கோடி பரிசு.. கடனில் வீடு பறிபோகும் நிலையில் அதிர்ஷ்டம் கேரள அரசு லாட்டரியில் கூலி தொழிலாளிக்கு ரூ.12கோடி பரிசு.. கடனில் வீடு பறிபோகும் நிலையில் அதிர்ஷ்டம்

    அப்போதுதான், மற்ற பயணிகள், பொதுமக்கள் இதை பார்த்து அலறினார்கள்.. பஸ் உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது... பயணிகள், டிரைவர் இறங்கி வந்து பார்த்தால், அந்த பஸ்ஸின் சக்கரத்தில் 2 பேர் சிக்கியிருந்தனர்... நல்லவேளை... இருவருமே ஹெல்மெட் போட்டிருந்தனர்... இல்லையென்றால், பஸ்ஸின் சக்கரத்தில் தலைகள் நசுங்கி போயிருக்கும். ஆனால் படுகாயம் அடைந்தனர்.

    டிரைவர் சாமர்த்தியமாக பிரேக் போட்டதாலும், முக்கியமாக 2 பேருமே ஹெல்மெல்ட் போட்டதாலும் உயிர்பலி தவிர்க்கப்பட்டது. இது சம்பந்தமான சிசிடிவி வெளியாகி உள்ளது.. பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடையும் அளவுக்கு அந்த வீடியோவை பார்க்க பதைபதைப்பாக உள்ளது!

    English summary
    gov bus hit on bike in coimbatore bus stand and this accident cctv footage has released now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X