• search
கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பொங்கல் விழாவில் உரியடித்த அண்ணாமலை.. கையோடு கோவை மாநகராட்சிக்கு எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

கோவை: வாகன நிறுத்தத்திற்கு அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து வரும் 21 ஆம் தேதி கோவையில் பாஜக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் உரியடித்த கையோடு மாநகராட்சிக்கு எதிராக போராட்டத்தையும் அறிவித்துள்ளார் அண்ணாமலை.
மேகதாதுவில் அணை கூடாது என்பதில் தமிழ்க பாஜக உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  பொங்கல் விழாவில் உரியடித்த அண்ணாமலை.. கையோடு கோவை மாநகராட்சிக்கு எச்சரிக்கை!

  செல்வபுரம் பகுதியில் பாஜக சார்பில் "நம்ம ஊரு மோடி பொங்கல் விழா" எனும் தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பண்டிகை கொண்டாட தடை இருந்தாலும் 108 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

  இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரியடித்து உற்சாகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பாஜக இளைய தலைமுறைக்கு நம் கலாச்சாரத்தை எடுத்து செல்லும் வகையில் பொங்கல் விழாவை நடத்தி வருகிறோம். பிரதமரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக கூறினார்.

  பஸ்சில் பயணம் செய்ய 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்.. அறிவிக்குமா தமிழக அரசு? பஸ்சில் பயணம் செய்ய 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்.. அறிவிக்குமா தமிழக அரசு?

  திருவள்ளுவர் இந்துவாக வாழ்ந்தவர்

  திருவள்ளுவர் இந்துவாக வாழ்ந்தவர்

  திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக சார்பில் திருவள்ளுவருக்கு ஒட்டப்பட்ட போஸ்டரில் உடை காவி நிறமாக இருந்தது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக உண்மையை புரிந்து கொண்டுவிட்டார்கள், என்றும் தமிழக மக்கள் திருவள்ளுவர் எப்படி வாழ்ந்தார் என பார்க்க துவங்கி விட்டார்கள், திருவள்ளுவர் இந்து முறைப்படி வாழ்ந்தவர் என பதிலளித்தார்.

  தமிழக ஊர்தி அனுமதிக்காதது ஏன்

  தமிழக ஊர்தி அனுமதிக்காதது ஏன்

  வேலுநாச்சியார் மற்றும் சிதம்பரனார் தேசிய தலைவர்கள் இல்லை என்பது மத்திய அரசின் கருத்து அல்ல. குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி அனுமதிக்காதது பாதுகாப்புத் துறை உரிய விளக்கம் அளிக்கும் என்று கூறினார். கேரள மாநில ஊர்தியில் ஆதிசங்கரர் படம் இடம்பெறக்கூடாது என கேரள அரசு அறிவித்துள்ளதால் நாராயணகுருவின் படமும் இடம் பெறவில்லை. நேரம் கருதி அனைத்து மாநில அரசுகளின் ஊர்திகளும் பங்கேற்க முடியாது எனக் கூறுனார்.

  பஞ்சாப்பில் பாதுகாப்பு குளறுபடி

  பஞ்சாப்பில் பாதுகாப்பு குளறுபடி

  உத்தரபிரதேசத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்க முடியாது என்ற நிலைப்பாடும், சாதி அரசியல் செய்யக்கூடாது என்ற நிலைப்பாடுகளால் பலர் விலகி சென்றுள்ளதாகவும், நிச்சயம் உத்தரபிரதேச தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என தெரிவித்தார். பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதன் மூலம், பிரதமரின் பயணத்தின் போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது எனவும், உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் முழுமையான தகவல்கள் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.

   கோவை மாநகராட்சி

  கோவை மாநகராட்சி

  கோவை மாநகராட்சியில் 30 சாலைகளில் வாகன நிறுத்தம் செய்ய கட்டணம் என்பது ஏற்புடையது அல்ல , இதனை கண்டித்து வருகிற 21ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளதாகவும், அதற்கு முன்பாக மாநகராட்சி நிர்வாகம் இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் இல்லையேல் மக்கள் தேர்தலில் இதற்கு பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார்.

  விஞ்ஞான ஊழல்

  விஞ்ஞான ஊழல்

  பொங்கல் பரிசுத் தொகுப்பில் தந்த வெல்லம் உருகும் என்பதை டெஸ்லா தலைவர் எலான் மஸ்கை அழைத்து வந்து ஒரு கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் விஞ்ஞான ஊழலுக்கு விஞ்ஞான பூர்வமாக விளக்கம் அளிக்கிறார்கள் எனவும் விமர்சித்தார். உதயநிதியை கிரவுன் பிரின்ஸ் என விமர்சித்த அவர், நகைக்கடன் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மூலம் தமிழக அரசு 500 வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என்பதற்கு சான்றாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

  தமிழக காங்கிரஸ் கட்சியின் கூடாரம் காலி

  தமிழக காங்கிரஸ் கட்சியின் கூடாரம் காலி


  பாஜக - அதிமுக கூட்டணி சிறப்பாக உள்ளது எனவும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது எனவும் கூறிய அவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் கூடாரம் காலியாகியுள்ளதாகவும் பாஜக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை எனவும் தெரிவித்தார்.

  தமிழ்க பாஜக உறுதி

  தமிழ்க பாஜக உறுதி

  கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தன்னை அவதூறாக பேசுவதோடு மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் எனவும் பேசுகிறார் ஆனால் திமுக இது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என கூறினார். மேகதாதுவில் அணை கூடாது என்பதில் தமிழ்க பாஜக உறுதியாக உள்ளது எனவும் தமிழக அரசின் உரிமைகளை மீட்டெடுக்காவிட்டால் காவிரி, முல்லை பெரியாறு அணைகளின் உரிமைகள் பறிபோகும் எனவும் தெரிவித்தார்.

  English summary
  BJP Modi Pongal celebration Coimbatore: (பாஜக மோடி பொங்கல் கொண்டாட்டம்) BJP state president Annamalai has said that a massive protest will be held on behalf of the BJP in Coimbatore on the 21st to condemn the high parking charges.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  Desktop Bottom Promotion