கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரல் பாடி சென்ற பாதிரியார்.. கெட்ட வார்த்தையில் திட்டி தாக்கிய பாஜக நிர்வாகி.. கோவையில் பரபரப்பு

பாதிரியாரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Coimbatore BJP youth wing secretary prakash attacked priest and arrested

    கோவை: கெட்ட கெட்ட வார்த்தைகளில் பாதிரியாரை திட்டிவிட்டார் பாஜக நிர்வாகி ஒருவர்.. "கிறிஸ்துமஸ் பாட்டை ஏன் ரோட்டுல சத்தமா பாடறீங்க.. மெதுவா பாடிட்டு போக மாட்டீங்களா" என்று பாதிரியாரை கேட்டதுடன், ஆபாசமாக பேசி அவரை தாக்கவும் செய்துள்ளார்.. இதையடுத்து, அந்த நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன.. இதனால் இதன் கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கி விட்டன.

    BJP person attacked priest near kovai

    கோவையிலும் கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. வேலாண்டிபாளையம் பகுதியில் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடிய படி "கேரல்" குழுவினர் சென்று கொண்டு இருந்தனர்.

    ஒவ்வொரு சர்ச்சிலும் உள்ள நபர்கள், இப்படி கேரல் ரவுண்ட்ஸ் கலந்து கொண்டு உற்சாகத்துடன் கிறிஸ்தவ பாடல்களை பாடியபடி செல்வர். அப்படித்தான் இவர்களும் பாடியபடி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

    இதை பார்த்த பாஜக இளைஞர் அணி செயலாளர் பிரகாஷ் எதிர்ப்பு தெரிவித்தார். "ஏன் இப்படி சத்தமா பாடிட்டு போறீங்க" என்று கேள்வி கேட்டு தகராறு செய்தார். அப்போது, கேரல் கூட்டத்தை நடத்தி வந்த ஜெபகுமார் என்ற பாதிரியாருக்கும் பிரகாஷிற்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில், பிரகாஷ், ஜெபகுமாரை ஆபாசமாக பேசி.. மிரட்டியதுடன்.. கடுமையாக தாக்கியும் உள்ளார்.

    பின்னர், இந்த சம்பவம் குறித்து ஜெபகுமார் போலீசில் புகார் செய்யவும், பாஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரகாஷை சாய்பாபா காலனி போலீசார் கைது செய்தனர். பிரகாஷ் மீது கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து, ஜெயிலிலும் அடைத்தனர்.

    English summary
    coimbatore BJP youth wing secretary prakash attacked priest and arrested
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X