கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அது ஏன் பாஜக மீது மட்டும் இவ்வளவு பாரபட்சம்".. அதிமுக அரசை நேரடியாக அட்டாக் செய்த வானதி..!

அதிமுக அரசை தாக்கி பேசிய வானதி சீனிவாசன்

Google Oneindia Tamil News

கோவை: "ஒரு மதம் இழிவுப்படுத்தப்படுவதை தடுத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த வேல் யாத்திரை நடத்தப்படுகிறது. ஆனால், ஏதோ சட்டத்துக்கு எதிராக நடப்பதை போல இங்கு உருவகப்படுத்துகிறார்கள்.. மற்ற கட்சிகளையெல்லாம் விடுத்து பாஜகவுக்கு மட்டும் தடை விதிப்பதில் பாரபட்சம் உள்ளது" என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வேல் யாத்திரை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.. கொரோனா தொற்றை காரணம் காட்டி, அதிமுக அரசு யாத்திரைக்கு அனுமதி மறுத்து வருகிறது..
இது சம்பந்தமாக சென்னை ஹைகோர்ட்டும் விசாரித்து வருகிறது... மற்றொருபுறம் யார் தடுத்தாலும் யாத்திரை நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உறுதி தெரிவித்து வருகிறார்.

BJP Vanathi Srinivasans says about TN Gov

அத்துடன் மாநில அரசுக்கு எதிரான பல கருத்துக்களை பாஜகவினர் முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனும் அதிமுக அரசை விமர்சித்துள்ளார். பாஜக மகளிர் தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் பேசியதாவது:

"நாட்டில் பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏராளமான திட்டங்களை நம்முடைய பாரத பிரதமர் மோடி அமல்படுத்தியுள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அருந்ததி ராயின் பாடம் நீக்கப்பட்டது குறித்த அறிவிப்பில் ஏபிவிபி என எங்கும் குறிப்பிடவில்லை.

எந்த அடிப்படையில் பாடத்தை பல்கலைக்கழகம் நீக்கியது என்று தெரியவில்லை. ஆனால், அவசரம் அவசரமாக பாடத்தை மாற்றவில்லை... 4 வருஷம் கழித்துதான் பாடம் மாற்றப்பட்டுள்ளது. இதில் அரசியல் அழுத்தம் என்று எதுவுமே இல்லை.. தவறான தகவல்.

நெஞ்சுவலியால் இறந்த மனைவி.. சிறிது நாளில் கொரோனாவுக்கு பாஜக எம்எல்ஏவும் பலி நெஞ்சுவலியால் இறந்த மனைவி.. சிறிது நாளில் கொரோனாவுக்கு பாஜக எம்எல்ஏவும் பலி

மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லவும், தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு மதம் இழிவுப்படுத்தப்படுவதை தடுத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த வேல் யாத்திரை நடத்தப்படுகிறது. ஆனால், ஏதோ சட்டத்துக்கு எதிராக நடப்பதை போல இங்கு உருவகப்படுத்துகிறார்கள். அதில் துளியும் உண்மையில்லை.

வேல் யாத்திரை நடத்தவே கூடாது என்று கோர்ட் தடை எதுவும் விதிக்கவில்லை. அதேசமயம், இந்த விவகாரத்தில் வழக்கு போட்டால் அந்த வழக்கை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். மற்ற கட்சிகளையெல்லாம் விடுத்து பாஜகவுக்கு மட்டும் தடை விதிப்பதில் பாரபட்சம் உள்ளது" என்று அதிமுக அரசை தாக்கி பேசினார்.

English summary
BJP Vanathi Srinivasans says about TN Gov
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X