கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளில் நிறைவடைந்து உள்ள நிலையில், இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

    தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று சில அசம்பாவித சம்பவங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், அமைதியாக நடைபெற்று முடிந்தது. புதுச்சேரி மக்களவை தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. சித்திரை திருவிழா நடைபெற்றதையொட்டி மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

    Brisk polling booths in tamilnadu .. with the invading peoples interest

    17 வது மக்களவை பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. தமிழகம், கர்நாடகம், பீகார் அசாம், உள்ளிட்ட 11 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் உட்பட நாடு முழுவதும் 95 தொகுதிகளில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடந்தது

    தமிழகத்தை பொறுத்த வரை அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மற்றபடி இதர 38 தொகுதிகள் மற்றும் புதுவை லோக்சபா தொகுதியில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

    இரவு 9 மணி வரையிலான நிலவரப்படி தமிழகத்தில் நடைபெற்ற லோக்சபா தொகுதி தேர்தலில் 70.90% வாக்குப்பதிவாகி உள்ளது. முன்னதாக பேசிய மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு, அதிகபட்சமாக நாமக்கலில் 78% வாக்குப்பதிவாகியுள்ளது என்றார். குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது

    தமிழகத்தில் இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்ற தொகுதிகள் பின்வருமாறு:

    திருவள்ளூர் 70.36%

    வடசென்னை 61.46%

    தென்சென்னை 58.14%

    மத்திய சென்னை 57.05%

    ஸ்ரீபெரும்புதூர் 60.39%

    காஞ்சிபுரம் 67.52%

    அரக்கோணம் 72.86%

    கிருஷ்ணகிரி 72.79%

    தருமபுரி 73.45%

    திருவண்ணாமலை 69.84%

    ஆரணி 75.08%

    விழுப்புரம் 72.50%

    கள்ளக்குறிச்சி 75.18%

    சேலம் 72.73%

    நாமக்கல் 78.00%

    ஈரோடு 71.10%

    திருப்பூர் 63.88%

    நீலகிரி 69.74%

    கோயமுத்தூர் 63.81%

    பொள்ளாச்சி 69.72%

    திண்டுக்கல் 70.40%

    கரூர் 75.84%

    திருச்சி 71.12%

    பெரம்பூர் 74.67%

    கடலூர் 72.51%

    சிதம்பரம் 76.07%

    மயிலாடுதுறை 71.20%

    நாகை 75.52%

    தஞ்சை 70.53%

    சிவகங்கை 70.48%

    மதுரை 80.12%

    தேனி 74.57%

    விருதுநகர் 70.38%

    ராமநாதபுரம் 67.70%

    தூத்துக்குடி 69.31%

    தென்காசி 70.39%

    திருநெல்வேலி 65.78%

    கன்னியாகுமரி 65.55%

    இது தவிர யூனியன் பிரதேசமான புதுவை மக்களவை தொகுதியில் 8 மணி நிலவரப்படி 81.02% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    English summary
    There has been brisk polling in the Lok Sabha polls in Tamil Nadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X