கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொள்ளாச்சி சம்பவம்.. திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

பொள்ளாச்சி சம்பவத்தில் 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Google Oneindia Tamil News

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

7 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்த கும்பலை அறிந்து நாடே உறைந்து நின்றது. இது சம்பந்தமாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.

CBI files charge sheet in Pollachi sexual assault case against five accused

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும்போது, இதே வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. இப்போது இந்த வழக்கு முழுசாக சிபிஐ போலீசார் வசம் உள்ளது.

இந்த வழக்கில் முதல் நபரே, முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுதான் என்பதால், கோவை சின்னியம்பாளையத்தில்தான் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள். அதேபோல, திருநாவுக்கரசின் பண்ணை வீட்டு பகுதிகளிலும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அப்பகுதி மக்கள் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. இது சம்பந்தமான ஆதாரங்களையும் அதிகாரிகள் சேகரித்தனர்.

இந்நிலையில் வழக்கில் கைதாகி உள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணி ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது.

நள்ளிரவில் விம்மி விம்மி அழுத தமிழிசை... என்ன காரணம்னு பாருங்க மக்களே! நள்ளிரவில் விம்மி விம்மி அழுத தமிழிசை... என்ன காரணம்னு பாருங்க மக்களே!

ஆரம்ப கட்டத்தில் இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தபோது, பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ்கூட வழக்கை பதிவு செய்யவில்லை. ஆனால் இப்போது இவர்கள் 5 பேருமே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது!

English summary
CBI has filed chargesheet in Pollachi sexual assault case against five accused including Thirunavukarasu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X