கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளிவர போகுது பல திடுக் திடுக் தகவல்கள்.. திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு!

குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்

Google Oneindia Tamil News

கோவை: திருநாவுக்கரசு வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த போயிருக்கிறார்களாம்.. அதனால் பெண்களை நாசம் செய்த பொள்ளாச்சி பாலியல் கும்பல் பற்றி பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 400க்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்து, வீடியோ எடுத்து வந்துள்ளது திருநாவுக்கரசு & கோ-வின் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று!

இதையடுத்து முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு, பொள்ளாச்சி போலீசார் விசாரணையும் நடத்தி வந்தனர்.

வாட்ஸ் ஆப் பயன்படுத்தறீங்களா.. உடனே அப்டேட் செய்யணுமாம்.. இல்லையேல் ஹேக்கிங் ஆபத்து இருக்காம்! வாட்ஸ் ஆப் பயன்படுத்தறீங்களா.. உடனே அப்டேட் செய்யணுமாம்.. இல்லையேல் ஹேக்கிங் ஆபத்து இருக்காம்!

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

ஆனால் அந்த விசாரணையில் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என பொதுவான குற்றச்சாட்டு பலமாக எழுந்தது. பின்னர், சிபிசிஐடி சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் இந்த வழக்கை கையில் எடுத்தார். விசாரணையை தீவிரப்படுத்தினார்.

ஆவணங்கள்

ஆவணங்கள்

இன்னொரு பக்கம் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை பலமாக எழுந்தது. இதை அரசும் ஏற்று கொண்டு, அரசாணையை வெளியிட்டது. இதையடுத்து கடந்த 27-ம் தேதி சிபிஐ விசாரணை ஆரம்பமானது. அப்போது, இதுவரை பொள்ளாச்சி வழக்கு சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆவணங்களை சிபிஐவசம் சிபிசிஐடி ஒப்படைத்தது.

கருணாநிதி

கருணாநிதி

இப்போது சிபிஐ போலீசார் முழு வீச்சில் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதில் முதல் நபரே, முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுதான்! கோவை, சின்னியம்பாளையத்தில்தான் திருநாவுக்கரசு வீடு உள்ளது. இன்று மதியம் அங்கு சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு சென்றது. சிபிஐ அதிகாரிகள் கருணாநிதி தலைமையிலான குழு அங்கு மதியத்திலிருந்து சோதனை நடத்தி வருகிறது.

வரைபடங்கள்

வரைபடங்கள்

இதற்கு முன்பு திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் இப்படித்தான் சிபிசிஐடி போலீசார் சென்றனர். அப்போது வீடு முழுவதும் ஆய்வு செய்ததுடன், நிபுணர் குழுவை வைத்து அந்த வீட்டின் வரைபடங்களையும் வரைந்த எடுத்து சென்றார்களாம். வீட்டிலிருந்தும் லேப்டாப், பென்டிரைவ் போன்றவற்றை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். இதை தவிர வீட்டை சுற்றிலும் நிறைய ஆணுறைகள் கிடந்ததாகவும் தகவல் வெளியானது.

திடுக் தகவல்கள்

திடுக் தகவல்கள்

இந்நிலையில், திருநாவுக்கரசு வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகளே நேரிடையாக சென்றுள்ளதால், மேலும் பல ஆதாரங்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. விரைவில் திருநாவுக்கரசு மட்டுமல்லாது, பொள்ளாச்சி கற்பழிப்பு கும்பல் குறித்த திடுக் திடுக் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
In Pollachi Gang rape case, CBI police has started raid in Thirunavukarasus Kovai house
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X