கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆன்லைன் ரம்மி உள்பட பணம் வைத்து விளையாடும் சூதாட்டங்களை தடை செய்ய முடிவு.. முதல்வர் பழனிசாமி

Google Oneindia Tamil News

கோவை: ஆன்லைன் ரம்மி உள்பட பணம் வைத்து விளையாடும் சூதாட்டங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி, திருப்பூரில் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். முதலில் நீலகிரி மாவட்டம் செல்லும் அவர், அங்கு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்.

அத்துடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.

விஜய் வெளியிட்ட அறிக்கையின் பரபர பின்னணி! இந்த ட்விஸ்டை கவனித்தீர்களா?விஜய் வெளியிட்ட அறிக்கையின் பரபர பின்னணி! இந்த ட்விஸ்டை கவனித்தீர்களா?

உக்கடம் மேம்பாலப் பணிகள்

உக்கடம் மேம்பாலப் பணிகள்

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அவர் கூறுகையில், கோவை மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக்
கொண்டு இருக்கிறது. உக்கடம் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன

கோவை கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1 கி.மீ. நீளத்திற்கு மேம்பாலப் பணிகள் நடக்கின்றன. அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால பணிகள் ரூ.1100 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டம்

"ஆன் லைன் ரம்மியை தடைசெய்யப்படுமா என்ற கேள்விக்கு பதில்அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆன்லைன் ரம்மி விளையாட்டை ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது. அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்றார்

ஏழு பேர் விடுதலை விவகாரம்

ஏழு பேர் விடுதலை விவகாரம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 7 பேர் விடுதலைக்காக குரல் கொடுத்து உண்மையான அக்கறையுடன் தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம். ஆனால் 7 பேர் விடுதலையில் திமுகவுக்கு அக்கறையில்லை.

144 தடை உத்தரவு

144 தடை உத்தரவு

அவர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக அரசு. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டி உள்ளது என்றார். பாஜக வேல் யாத்திரை தடை குறித்த கேள்விக்கு பதில்அளித்த முதல்வர், 144 தடை உத்தரவு உள்ளதால் வேல் யாத்திரைக்கு சட்டப்படி அனுமதி வழங்க இயலாது என்றார்.

English summary
tamilnadu Chief Minister Edappadi Palanisamy has announced that steps will be taken to ban money laundering, including online rummy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X