Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்
கோவை: ஆனைமலை யானைகள் முகாமில் உள்ள சின்னத்தம்பி யானையின் உடல்நலம் நன்றாக இருக்கிறது என்றும் அந்த யானை கவலைக்கிடமாக உள்ளது என்று பரவிய செய்தி வதந்தி என்றும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
பி வாசு இயக்கிய சின்னத்தம்பி படத்தை காட்டிலும் அதிக பிரபலமான இன்னொரு சின்னத்தம்பி யாரென்றால் கோவை வனப்பகுதியில் வசிக்கும் யானை ஆகும். இந்த யானை கோவை டாப்சிலிப் வனபகுதியிலிருந்து ஊருக்குள் திரும்பியது.

கும்கி உதவியுடன்
அப்போது சில நேரங்களில் பயிர்களை நாசம் செய்து சேட்டை செய்யும் சின்னத்தம்பியை மக்கள் ஊரை விட்டு விரட்ட முடிவு செய்தனர். இதையடுத்து வனத்துறையின் உதவியின் பேரில் அவனுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு கும்கி யானைகள் உதவியுடன் காட்டுக்குள் அனுப்பப்பட்டது.

கும்கியாக மாற்ற முடிவு
எனினும் மீண்டும் ஊருக்குள் வந்தது. இதையடுத்து அந்த யானையை கும்கியாக மாற்ற வனத்துறை முடிவு செய்தது. இதற்கு வனநல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடினர். இதைடுத்து கும்கியாக மாற்றும் முடிவு கைவிடப்பட்டது.

சமூகவலைதளங்கள்
இதைத் தொடர்ந்து அந்த யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரகளியாறு யானைகள் முகாமில் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த யானைக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வந்தன.

வதந்தியை நம்பாதீர்
இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறுகையில் சின்னத்தம்பி யானை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நல்ல உணவு வழங்கப்பட்டு வருகிறது. எனவே யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications