கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சின்னத்தம்பியின் டென்ட்டை காலி செய்த வனத்துறை.. குட்டிப்பையன் இனி என்ன செய்வானோ.. மக்கள் கவலை

Google Oneindia Tamil News

Recommended Video

    சின்னத்தம்பியின் டென்ட்டை காலி செய்த வனத்துறை-வீடியோ

    கோவை: சின்னதம்பி இத்தனை நாட்களாக படுத்து உறங்கிய டென்ட்டை வனத்துறையினர் இடித்துவிட்டனர். இதன் மூலம் அவனை வனத்துறைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

    உடுமலை அருகே வனப்பகுதியில் இருந்து கிருஷ்ணபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பின்புறம் உள்ள புதரில் 5 -வது நாளாக சின்ன தம்பி தஞ்சமடைந்துள்ளான்.

    Chinnathambis resting place demolished by Forest department

    இந்த நிலையில் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே வேளை தமிழக அரசும் அத்தகைய எண்ணம் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டது.

    இதனால் சின்னத்தம்பியை மீண்டும் காட்டுக்குள் அனுப்புவதை தவிர வனத்துறைக்கு வேறு சாய்ஸே இல்லை என கூறப்படுகிறது. இதற்காக கடந்த 5 தினங்களாக சின்னத்தம்பி தங்கியிருந்த முட்புதர்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்தது.

    அங்கு தேங்கியிருந்த சர்க்கரை ஆலை கழிவு நீர் வெளியேற்றப்பட்டு மண் கொட்டி நிரவப்பட்டது. சின்னத்தம்பியை அதன் போக்கிலேயே வனப்பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    English summary
    Chinnathambi's resting place near Amaravathi Sugar factory demolished by Forest Department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X