கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு

By Sivam
Google Oneindia Tamil News

கோவை: கோவை தனியார் நிதி நிறுவன பணமோசடி வழக்கில், தங்களையும் இணைத்து முதலீடு செய்த பணத்தை பெற்று தரக் கோரி 50-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கோவை பீளமேட்டில் யூனிவர்சல் டிரேடிங் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்ப்பட்டு வந்தது. இதில் பணத்தை முதலீடு செய்தால் கூடுதல் வட்டியுடன் திருப்பி தரப்படும் கூறியதால், சுமார் 45 ஆயிரம் பேர் வரை முதலீடு செய்திருந்தனர்.

Chit fund scandal: Customers files plea in Chennai HC

இந்நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு இந்நிறுவனத்தில் வருமான வரிதுறை சோதனை நடத்தி, கணக்கில் வராத 9 கோடி ரூபாயை பறிமுதல் செய்ததோடு 20 கோடி வரை மதிப்பிலான வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது.

இதனால் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பணத்தை திரும்ப தர கோரி நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் என்பவரிடம் பல முறை முறையிட்டும் பணம் திரும்ப கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதே வேலையில் நிர்வாக இயக்குனர் தன் பெயரிலும், தன் குடும்பத்தார் பெயரிலும் பல சொத்துகளை வாங்கி குவிந்துள்ளார். பொருளாதார குற்றப்புலான்வு காவல்துறை இது தொடர்பாக தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்ய கோரி தனியார் நிதி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை.விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் விசாரனைக்கு தடை விதித்தது. முதலீட்டாளர்கள் குறித்து விவரங்களை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி கே என் பாஷா அவர்களை நியமித்து உத்தரவிட்டது.

இதில் 365 பேருக்கு 11 கோடியே 55 லட்சத்து56 ஆயிரத்து260 ரூபாய் அளவிற்கு பணம் திருப்பி வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட தங்களையும் இணைத்து பணத்தை பெற்று தர கோரி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பூபாலன் உள்ளிட்ட 50 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
50 more files plea in Chennai HC to get back their money which was deposited in Chit fund company.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X