கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொண்டாமுத்தூரே ஆடிப்போச்சு .. அடுக்கடுக்காக கேள்விகளை கேட்ட எடப்பாடியார்.. வெலவெலத்து போன திமுக..!

வேகம் எடுத்து வருகிறது முதல்வரின் பிரச்சாரங்கள்

Google Oneindia Tamil News

கோவை: முதல்வர் கேட்ட ஒத்த கேள்வியால் திமுக கூடாரமே வெலவெலத்து போயுள்ளதாம்..!

கோவை வடவள்ளி, தொண்டாமுத்துாரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.. வழக்கமாகவே தேர்தல் பிரச்சாரங்களில் திமுகவின் ஊழலை லிஸ்ட் போட்டு சொல்வார் எடப்பாடியார்.. அல்லது திமுக தலைமையின் செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பார்.

ஆனால், நேற்று அப்படி இல்லை.. இறந்து போன ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமே கருணாநிதியும், ஸ்டாலினும்தான் என்று குற்றஞ்சாட்டி உள்ளார்..

CM Edapadi Palanisamys Coimbatore Campaign

முதல்வர் பேசும்போது,"ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதாக, ஸ்டாலின் சொல்கிறாரே, ஜெயலலிதா மீது கருணாநிதியும், ஸ்டாலினும் தவறான வழக்குகளை போட்டனர்.. அதில் அவர் விடுதலையான பிறகும் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர். அவர் சிறைக்கு சென்றதால் தான், உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

அவருடைய மரணத்துக்கு காரணம் கருணாநிதியும், ஸ்டாலினும் தான்... கருணாநிதியை 2 வருஷமாகவே பார்க்க முடியவில்லை என்று அவருடைய மூத்த மகன் அழகிரி இப்போது வந்து சொல்கிறார்... அதைத் தடுத்தது யாரு? ஸ்டாலின் தான்.. கருணாநிதி பேசாமல் இருந்ததற்கு காரணமும் அவர்தான் என்று அவருடைய கட்சியினரே சொல்கிறார்கள்.

என்னது.. ஹிந்தி என்னது.. ஹிந்தி "தேசிய" மொழியா.. இல்லவே இல்லை.. தமிழ்தாங்க தேசிய மொழி.. இதை படிங்க முதல்ல!

கருணாநிதியை ஏன் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை? அவரை வெளிநாட்டிற்கு கூட்டிட்டு போய், சிகிச்சை தந்திருந்தால், நல்லா பேசியிருப்பாரே... அவர் பேசியிருந்தால், இவர் கட்சி தலைவராகியிருக்க முடியாதே.. சொந்த அப்பாவையே அங்கீகரிக்காத ஸ்டாலினை, எப்படி மக்கள் அங்கீகரிப்பர்? என்று கேள்வி எழுப்பினார்.

எடப்பாடியாரின் இந்த பேச்சினால் திமுக அதிர்ந்து போய் உள்ளதாம்.. காரணம், ஜெ. மரண வழக்கு தொடர்பாக பிரச்சாரங்களில் கேள்வி எழுப்பலாம் என்றும், அந்த வழக்கை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விசாரிப்போம் என்றும் ஸ்டாலின் சொல்லி வரும் நிலையில், கருணாநிதி மரணத்தை கிண்டிகிணறி எடப்பாடியார் கேள்வி எழுப்புவது கொஞ்சம் ஷாக்தானாம்..!

English summary
CM Edapadi Palanisamys Coimbatore Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X