கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சாதி".. கரையான்பாளையத்தில் டக்கென காரை நிறுத்திய எடப்பாடியார்.. அப்படியே ஷாக்கான மலரவன்..!

ஆதிதிராவிடர் வாக்குகளை மொத்தமாக அள்ள எடப்பாடியார் செம திட்டம் வைத்துள்ளார்

Google Oneindia Tamil News

கோவை: மொத்த சமுதாய வாக்குகளையும், அப்படியே அதிமுகவுக்கு ஷிப்ட் செய்யும் முயற்சியில் அதிமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.. ஆனால், இந்த 6 மாத காலமாகவே, அனைத்து சமுதாய மக்களின் ஓட்டுக்களை அள்ள எடப்பாடியார் தரப்பு ஆர்வம் காட்டி வருகிறது.

அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் ஏராளமான திட்டங்களை அறிவித்து அம்மாவட்ட மக்களின் வாக்குகளை வலுவாக அதிமுக கையில் இறுக்கமாக வைத்துள்ளது..

சமுதாயம்

சமுதாயம்

இப்போதும் கொங்கு மண்டலம் முழுவதும் வளர்ச்சி பணிகள் பல நடந்து வருகின்றன. அதேசமயம், அருந்ததியர் சமுதாயத்தினருக்கு உள் ஒதுக்கீடு தந்ததில் திமுக மீது அந்த சமுதாயத்தினருக்கு எப்போதுமே நன்றி உள்ளது.. இது கலைஞர் இருந்தபோதிருந்தே இவர்களின் ஆதரவு கிடைத்து வருகிறது..

அருந்ததியினர்

அருந்ததியினர்

அதேசமயம், இந்த 5 வருஷத்தில் அதிமுக ஆட்சியில் அருந்ததியர் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர், பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற பேச்சும் எழுந்தது. இதனைதான் எடப்பாடியார் களைய முயற்சித்தார்.. அதற்காகவே, அருந்ததியர் காலனியில் மக்களோடு சேர்ந்து சாப்பிட்டார்.. அத்துடன், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் உத்தரவிட்டுள்ளார். இப்போது, அந்த பகுதிகளில் வேலைகளும் ஜரூராக நடப்பதுடன், அருந்ததியர் மக்களின் வாக்குகளையும் முதல்வர் ஓரளவு பெறக்கூடும் என்று தெரிகிறது.

கரையான்பாளையம்

கரையான்பாளையம்

அடுத்ததாக, ஆதிதிராவிடர் சமுதாய ஓட்டுக்களை அள்ளவும் எடப்பாடியார் தரப்பு முயன்றது.. கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்டார் முதல்வர் பழனிசாமி.. அப்போது கரையான்பாளையம் பகுதியில் டக்கென தன்னுடைய காரை நிறுத்திய முதல்வர், அங்குள்ள ஆதிதிராவிடர் காலனிக்கு சென்றார்.

மலரவன்

மலரவன்

அருந்ததியர் பிரிவை சேர்ந்த மலரவன் என்ற அதிமுக தொண்டர் வீட்டிற்குள் நுழைந்து டீ சாப்பிட்டார்.. கொஞ்ச நேரம், மலரவனுடன் பேசினார்.. பிறகு அந்த பகுதியில் இருந்த கோயிலிலும் சாமிதரிசனம் செய்தார்... இதை பார்த்த அந்த பகுதி மக்கள் நெகிழ்ந்தே போய்விட்டனர்.. ஆக, ஒவ்வொரு சமுதாய மக்களின் ஓட்டுக்களை லட்டு போல அள்ளும் முயற்சியில் எடப்பாடியார் தரப்பு இறங்கி வருகிறது...!

English summary
CM Edapadi Palanisamys mass strategy in Kongu Belt Vote
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X