கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்!

Google Oneindia Tamil News

கோவை: வேலூர் தேர்தலில் என்ன வாக்குறுதிகள் திமுகவால் அளிக்க முடியும். மத்தியில், மாநிலத்தில் ஆட்சிக்கு வருவோம் என அப்போது மிட்டாய் கதை கூறி மக்களை ஏமாற்றி செய்ய முடியாத நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் வாரி வழங்கியுள்ளதாக திமுகவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், வேட்டைத் தடுப்பு காவலர்கள் கோரிக்கை தொடர்பாக துறையிடம்தான் கேட்டு சொல்ல முடியும்.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக அவரவர் கருத்தை சொல்லி வருகிறார்கள்.

செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை

அறிவுரைகள்

அறிவுரைகள்

தமிழக அரசின் நிலைப்பாட்டை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே சொல்லிவிட்டார். அத்திவரதர் தரிசனம் , தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு, அந்தந்த ஆட்சியர், துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

போதுமான வசதிகள்

போதுமான வசதிகள்

இன்றிரவே தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் காஞ்சிபுரம் சென்று பார்வையிட்டு அனைத்து வசதிகளும் செய்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்பாராத வகையில் மக்கள் கூட்டம் வந்து கொண்டிருப்பதால், முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மழை, வெயில் பாதிக்காத வகையில் கூரை, குடிநீர், நடமாடும் மருத்துவமனை குழு, இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ், 3 பஸ் நிலையத்திலிருந்து அத்திவரதரை தரிசிக்க மினி பேருந்து வசதி, போதுமான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

டிக் டாக் செயலி

டிக் டாக் செயலி

சட்டம் சரியாக இருக்க வேண்டும். மக்களை காப்பதற்கு தான் சட்டம் , மக்களை காப்பதற்கு எந்த சட்டம் கொண்டு வந்தாலும் அதிமுக அரசு ஆதரிக்கும் என என்.ஐ.ஏ. சட்டத்திருத்த மசோதா தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதல்வர், டிக் டாக் செயலியை தடை செய்வது சரி தான்.

நல்லது

நல்லது

இளைஞர்கள் அறியாமல் வயது காரணமாக அதில் ஈடுபட்டு உயிர் ஆபத்து ஏற்படுகிறது. இதனால் மற்றவர்களுக்கும் இடையூறு ஏற்படுவதால் டிக் டாக் செயலியை தவிர்ப்பது நல்லது என்றார்.

English summary
CM Edappadi Palanisamy criticises DMK for saying fake promises to cheat the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X