கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கவுண்டம்பாளையம் நடராஜ் நகருக்கா செல்கிறீர்கள்? அப்போ கவுன்சிலர் வைத்த வாஷ்பேசினில் கை கழுவுங்கள்!

Google Oneindia Tamil News

கோவை: கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக வீதிகளுக்கு உள்ளே செல்லும் முன்பாக கைகளை கழுவ சோப்புடன் வீட்டு முன்பாக வாஷ்பேசினை அதிமுக பெண் உறுப்பினர் உருவாக்கியுள்ளார்.

Recommended Video

    கவுண்டம்பாளையம் நடராஜ் நகருக்கா செல்கிறீர்கள்? அப்போ கவுன்சிலர் வைத்த வாஷ்பேசினில் கை கழுவுங்கள்!

    உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைரஸ் பரவாமல் தடுக்க கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ சுகாதார துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    சுத்தமாக கை கழுவுதல்

    சுத்தமாக கை கழுவுதல்

    இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பழைய ஆறாவது வார்டு நடராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் சோனாலி பிரதீப் என்பவர் தனது வீட்டின் முன்பாக வாஷ்பேசின் அமைத்து அதில் சோப்பு மற்றும் திரவங்களை வைத்து வீதிக்குள் செல்லும் முன்னர் அனைத்து பொது மக்களும் கைகளை சுத்தமாக கழுவ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    பணிகள்

    பணிகள்

    அ.தி.மு.க. உறுப்பினரான மேலும் தனது பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு மளிகைச் சாமான்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், தமிழக அரசுடன் அனைத்து பொதுமக்களும் இந்த அவசர கால நேரத்தில் உதவும் படி இந்தப் பணிகளை செய்து வருகிறேன்.

    ஊரடங்கு

    ஊரடங்கு

    இந்த நோய் நம்மை தாக்காமல் இருக்க, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 விநாடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இருமும் போதும் தும்மும் போதும் முகத்தை கைக்குட்டை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும். குறிப்பாக வீட்டை விட்டு வெறியேறாமல் அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    அலட்சியம்

    அலட்சியம்

    தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருக்க அறிவுறுத்தினால் அவர்கள் அத்தியாவசிய பணி என கூறிக் கொண்டு வெளியே வருகிறார்கள். இதற்காக போலீஸார் கையெடுத்து கும்பிட்டு அறிவுறுத்தியும் யாரும் கேட்பதாக இல்லை. இது சமூக பரவலை அதிகரிக்கும் என கூறியும் பொதுமக்கள் சிலர் அலட்சியமாக உள்ளனர்.

    English summary
    Coimbatore ADMK Councilor installed wash basin and soap at the entrance to create coronavirus awareness.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X