கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவை மாநகாட்சியில் 549 துப்புரவு பணியாளர் வேலைக்கு என்ஜினியர்கள் உள்பட 7000 பட்டதாரிகள் விண்ணப்பம்

Google Oneindia Tamil News

கோவை: கோவை மாநகராட்சியில் 549 துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு என்ஜினியரிங் பட்டதாரிகள் உள்பட ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்து இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு வேலையில் சேர வேண்டும் என்பது இன்றைய பல இளைஞர்களின் கனவாக இருக்கிறது.

அது எந்த துறையாக இருந்தாலும், எந்த வேலையாக இருந்தாலும் அரசு வேலையில் எப்படியும் சேர வேண்டும் என இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

பெண் கால்நடை மருத்துவர் எரித்து கொலை... ஹைதராபாத்தில் பயங்கரம்பெண் கால்நடை மருத்துவர் எரித்து கொலை... ஹைதராபாத்தில் பயங்கரம்

அரசு பணி பாதுகாப்பு

அரசு பணி பாதுகாப்பு

ஏனெனில் தனியார் துறையில் படித்த படிப்புக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் இப்போது இல்லை,. அப்படியே கிடைத்தாலும் 58 வயது வரை செய்யும் அளவுக்கு நிலையானதாக இல்லை என்பது நிதர்சமான உண்மை. அதேநேரம் அரசு வேலையில் சேர்ந்தால் பணி பாதுகாப்பு, ஒன்றாம் தேதி சம்பளம், ஆண்டு தோறும் ஊதிய உயர்வு என்பது உறுதியாக இருக்கும்.

விடா முயற்சி

விடா முயற்சி

இதனால் படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் வேலை கிடைக்காமல், கிடைக்கும் வேலையை செய்த படி அரசு துறையில் எந்த வேலை இருந்தாலும் சேருவோம் என்ற குறிக்கோளுடன் முயற்சி செய்து வருகிறார்கள்.

கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சி

அந்த வகையில், கோவை மாநராட்சியில் காலியாக உள்ள 549 கிரேடு 1 துப்புரவு பணியிடங்களுக்கு என்ஜினியரிங் முடித்தவர்கள் உள்பட 7 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

பட்டதாரி பேட்டி

இது தொடர்பாக கோவை மாநகராட்சியில் துப்புரவு வேலைக்கு விண்ணப்பித்த மெகாட்ரானிஸ் என்ஜினியரிங் படித்த அருண்குமார் கூறுகையில், "நான் பிஇ முடித்தேன், ஆனால் என் துறையில் எனக்கு வேலை கிடைக்கவில்லை. எனக்கு இப்போது வேலை வேண்டும். எனவே, நான் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளேன்" என்றார்.

English summary
7000 graduates including engineers applied for 549 grade-1 sanitary worker posts in Coimbatore City Municipal Corporation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X