கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இணைய தளத்தில் வெளியான விண்ணப்பமே போலி.... ஒரே போடு போட்ட கோவை மாநகராட்சி ஆணையர்

இந்தி படிக்க விருப்பமா என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்த விண்ணப்பமே போலியானது என்று கோவை மாநகராட்சி ஷர்வன்குமார் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

கோவை: கோவை மாநகராட்சி பள்ளியில் 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என்ற கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. இணையதளத்தில் வெளியான அந்த விண்ணப்பம் போலியானது என்று மறுத்துள்ளார் மாநகராட்சி ஆணையர் ஷர்வன் குமார். நான் பதவியேற்ற பின்னர் அப்படி ஒரு விண்ணப்ப படிவம் வெளியிடப்படவில்லை என்று கூறிய ஷர்வன் குமார், மாணவர் சேர்க்கையின் போது இந்தி தொடர்பாக எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அரசு பள்ளி விண்ணப்ப படிவத்தில் இந்தி ? கோவை ஆணையர் பரபர பதில்

    இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

    Coimbatore Corporation Commissioner J Shravan Kumar explanation about hindi question application

    பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கியுள்ளது. கோவை மாநகராட்சி அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணி தொடங்கியது. 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என மாநகராட்சி பள்ளியின் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை படிவத்தில் கேள்வி இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்த நிலையில் 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என கோவை மாநகராட்சி பள்ளியின் மாணவர் சேர்க்கை படிவத்தில் இடம்பெற்ற கேள்வியால் இன்று சர்ச்சை எழுந்துள்ளது.

    அரசு பள்ளி விண்ணப்ப படிவத்தில் இந்தி ? கோவை ஆணையர் பரபர பதில் அரசு பள்ளி விண்ணப்ப படிவத்தில் இந்தி ? கோவை ஆணையர் பரபர பதில்

    கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 16 மேல்நிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப்பள்ளிகள்,1 நடுநிலைப்பள்ளி, 13 உயர் தொடக்கப் பள்ளிகள், 42 ஆரம்ப பள்ளிகள், காது கேளாதோருக்கான 1 உயர்நிலைப் பள்ளி என 84 செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2020-21 கல்வி ஆண்டிற்கான ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடத்த கோவை மாநகராட்சி ஆணையம் அறிவித்துள்ளது.

    இதற்காக பிரத்யேகமாக ஒரு இணைய லிங்க் மற்றும் தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது. அந்த லிங்க் மற்றும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மாணவர் சேர்க்கைக்கான விவரங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டு பெற்றோர்கள் மாணவர்களை பள்ளியில் சேர்க்கலாம் என்றும் மாநகராட்சி ஆணையம் அறிவித்துள்ளது.

    இதற்கான அறிக்கையை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் வெளியிட்டுள்ளார். 9842951127, 9442075061மாநகராட்சி கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த பள்ளிகளில் தற்போது நிலவி வரும் கொரோனா தாக்குதலின் காரணமாக சமூக இடைவெளியுடன் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்காக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்

    இந்த நிலையில்தான் மூன்றாவது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என்று மாணவர் விண்ணப்ப படிவத்தில் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. கைத்தொழில் படிக்க விருப்பமா என்ற கேள்வியும் இடம் பெற்றிருந்தது. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுகிறதோ என்ற கேள்வியும் எழுந்தது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார்.

    செய்தியாளர்களிடம் பேசிய ஷர்வன்குமார் நான் பதவியேற்ற பின்னர் அப்படி ஒரு விண்ணப்ப படிவம் வெளியிடப்படவில்லை என்று கூறிய ஷர்வன் குமார், மாணவர் சேர்க்கையின் போது இந்தி தொடர்பாக எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை என்றும் சொன்னார்.
    இந்தி கேள்வி அடங்கிய விண்ணப்ப படிவமே போலியானது என்றும் கூறியுள்ளார்.

    மாநகராட்சிக்கு கெட்ட பெயர் வரவேண்டும் என்பதற்காக இப்படி ஒரு போலியான விண்ணப்பத்தை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் ஷர்வன் குமார்.

    English summary
    Controversy has arisen over the question of whether one wants to study Hindi as a 3rd language in Coimbatore Corporation School. Coimbatore Corporation Commissioner J Shravan Kumar has denied that the application published on the website was fake. Shravan Kumar said that no such application form has been issued since I took office, adding that no questions were asked regarding Hindi during admission.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X