கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நம்ம சின்னத்தம்பியே நல்லத்தம்பி போலயே.. பொள்ளாச்சியில் அட்டகாசம் செய்யும் அரிசி ராஜா யானை!

Google Oneindia Tamil News

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கடந்த 3 மாதங்களாக சுற்றி வரும் காட்டு யானை அரிசி ராஜாவை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பொள்ளாச்சி வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் காட்டு யானை ஒன்று கடந்த 3 மாதங்களாக சுற்றி வருகிறது. இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டிய அர்த்தநாரிபாளையம், முணுகைபள்ளம் பகுதியை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (60).

இவர் கடந்த சனிக்கிழமை இந்த யானை தாக்கியதில் பலியானார். அது போல் நொச்சிபள்ளம் பகுதியை சேர்ந்த விவசாயி செல்வராஜ். இவரது மனைவி திருமாத்தாள் (55). இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தனர்.

ஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை! ஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை!

வனத்துறை

வனத்துறை

அப்போது அங்கு வந்த யானை திருமாத்தாளை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அர்த்தநாரிபாளையம் பகுதியில் சுற்றித் திரியும் அந்த காட்டுயானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

உறவினர்கள் போராட்டம்

உறவினர்கள் போராட்டம்

இந்த நிலையில் காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி இறந்த ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் ,பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காட்டு யானையை பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள்

பொதுமக்கள்

இதனிடையே காட்டுயானையை பிடிக்க கலீம், மாரியப்பன் என்ற கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. யானையை மயக்க ஊசி மூலம் பிடிக்க வனத்துறையினரும் கால்நடைகள் மருத்துவக் குழுவும் முயற்சித்து வருகின்றன. யானையை பிடிக்கும் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யானைக்கு அரிசி ராஜா

யானைக்கு அரிசி ராஜா

3 மாதங்களாக அட்டகாசம் செய்யும் இந்த காட்டுயானையின் பெயர் அரிசி ராஜாவாம். அதென்ன அரிசி என்ற அடைமொழி என கேட்கிறீர்களா? பொள்ளாச்சியிலிருக்கும் ரேஷன் கடைகளுக்குள் புகுந்தால் அரிசி மூட்டைகளை காலி செய்யாமல் விடமாட்டானாம். அது போல் வீடுகளுக்குள் புகுந்து அரிசியை சாப்பிடுவதால் இந்த யானைக்கு அரிசி ராஜா என பெயரிடப்பட்டுள்ளது.

சின்னத்தம்பியே பெட்டர்

சின்னத்தம்பியே பெட்டர்

4 மாதங்களில் 3 பேரை கொன்றதுடன் ரேஷன் கடை, வீடுகளில் அரிசியை காலி செய்த அரிசி ராஜாவுக்கு, கோவையை அடுத்த கண்ணாடிபுத்தூரில் யாரையும் துன்புறுத்தாமல் மக்கள் கொடுக்கும் உணவுகளை மட்டுமே விரும்பி உண்ட சின்னத்தம்பி "தவுசன்ட் (1000) டைம்ஸ் பெட்டர்தானே!

English summary
Coimbatore Forest department put effort to catch the wild elephant Arisi Raja.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X