கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நல்ல தமிழகமாக இருக்காது! கோவை சிறுமி கொலை விவகாரத்தில் கமல் ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Pollachi Issue - பொள்ளாச்சி பயங்கரம்..கமல்ஹாசன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆவேசமாக பல கேள்வி

    கோவை: கோவை துடியலூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.

    பொள்ளாச்சி பயங்கரம் கண்னை உறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் கோவையில் நேற்று முன்தினம் கொடூரமான சம்பவம் நடந்திருக்கிறது.

    கோவை துடியலூரில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.

    எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.. சாதித்துக் காட்டுவோம்.. கமல்ஹாசன் பிரச்சாரம் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.. சாதித்துக் காட்டுவோம்.. கமல்ஹாசன் பிரச்சாரம்

    சிறுமி கொலை

    சிறுமி கொலை

    அடையாளம் தெரியாத கும்பல் அல்லது ஒருவரால் கைகள் கட்டப்பட்ட நிலையில் அந்த 6 வயது சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. கோவை மாநகரத்தையே கொந்தளிப்பான நிலைக்கு மாற்றியுள்ளது.

    போலீசார் விசாரணை

    போலீசார் விசாரணை

    இந்த பயங்கர சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். குற்றவாளிகள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்ப்படவில்லை. கோவை துடியலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

    கடும் நடவடிக்கை

    கடும் நடவடிக்கை

    சிறுமியின் பிரேதம் கண்டுபிடிக்கப்பட்ட அன்று கோவையில் பெரிய அளவில் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் சொன்ன விஷயம் குற்றவாளியை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான். இதனிடையே அரசியல் கட்சி தலைவர்களும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்

    கமல் ஆறுதல்

    கமல் ஆறுதல்

    நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் இன்று கோவை துடியலூர் சென்று கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்,

    போலீஸ் மீது நம்பிக்கை

    போலீஸ் மீது நம்பிக்கை

    அதன்பின்னர் செய்தியாளர்களிம் பேசிய கமல் ஹாசன், வீட்டின் அருகே 20 அடி தள்ளி குழந்தைகள் விளையாடக் கூடி சூழல் இல்லாவிடில் நல்ல தமிழகமாக இருக்காது என்றார். கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதில் தாமதம் ஏன் என்றும் கமல்ஹாசன் கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கோவை சிறுமி கொலை வழக்கில் காவல்துறை தன் கடமையைச் செய்யும் என நம்புவதாகவும் கமல் தெரிவித்தார்.

    English summary
    Coimbatore girl murder case: Why delay in catching criminals? Kamal ask police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X