கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா நிவாரணத்துக்காக.. ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் உலக சாம்பியன் வென்ற கோவை சிறுமிகள்

Google Oneindia Tamil News

கோவை: உலக சாதனை படைத்த பள்ளி சிறுமி தங்கையுடன் இணைந்து ஆன்லைன் வகுப்பெடுத்து கொரணா நிவாரணம் திரட்டி வருகிறார்கள்.

Recommended Video

    கொரோனா நிவாரணத்துக்காக.. ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் உலக சாம்பியன் வென்ற கோவை சிறுமிகள்

    கோவை சுந்தராபுரம் சாரதா மில் அக்சயா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அசோக். இவரின் மகள்கள் அக்சயா, அக்சித்தா. அக்சயா 10 ஆம் வகுப்பு படிக்கிறார். அக்சித்தா 6 வகுப்பு படிக்கிறார்.

    சிவசங்கர் பாபாவின் வலதுக்கரமாக இருந்த சுஷ்மிதா.6 மாதக் கை குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன் ஆஜர்!சிவசங்கர் பாபாவின் வலதுக்கரமாக இருந்த சுஷ்மிதா.6 மாதக் கை குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன் ஆஜர்!

    அக்சயா ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே யோகா கற்றுக் கொள்ள தொடங்கி 70-க்கும் மேற்பட்ட ஆசனங்களை கற்று தேர்ந்திருக்கிறார். அவரது தங்கையான அக்சதாவும் சிறு வயது முதலே யோக கலை கற்றுக்கொண்டு 40க்கும் மேற்பட்ட ஆசனங்களை கற்று தேர்ந்திருக்கிறார்.

    வெளிநாடுகள்

    வெளிநாடுகள்

    உலக அளவில் தாய்லந்து, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் நடந்த உலக அளவிலாக யோகா போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று வெற்றிகளை குவித்திருக்கின்ற சிறுமிகள் யோகா கலையில் கைதேர்ந்தவர்கள். அக்சயாவின் யோகா கலைத் திறனை அறிந்து அவருக்கு யோகா கலையில் உலக சாதனை விருது தந்தும் கெளரவிக்கப்பட்டு இருக்கிறார்.

    பேரிடர்

    பேரிடர்

    கொரோனா பேரிடரில் வீட்டில் முடங்கிய சிறுமிகள் கொரோனா நிவாரண நிதிக்காக ஆன்லைன் வகுப்பெடுக்க முடிவு செய்தனர். கொரோனா நிவாரண நிதி திரட்ட தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் மேற்கொண்ட முயற்ச்சிக்கு கிடைத்த பலன் இது என்றால் அது மிகையாகாது.

    மனஉளைச்சல்

    மனஉளைச்சல்

    வீட்டில் பொது ஊரடங்கில் மன உளைச்சலுடனும் வெளியில் உடற்பயிற்சிக்கு செல்லாமலிருப்போருக்கும் உதவுகின்ற வகையில் யோகா உடல் மன உறுதிக்கான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சிறுமிகள் காலை 6:30 முதல் 7:30 மணி வரை வாட்ஸ் ஆப்பில் இணைய வழி பயிற்ச்சிகான பங்கேற்பு ஐ டியினை முன்னதாகவே தருகின்றனர்.

    ஆரம்பம்

    ஆரம்பம்

    வகுப்புகள் ஆரம்பித்தவுடன் யோகா கலையினை உலக சாம்பியன்களான சகோதரிகள் கற்று தருகின்றனர். இந்த வகுப்புக்கு சேலம் சென்னை கோவை நகரங்களிலிருந்து பங்கேற்று வகுப்புகள் நடந்து வருகின்றன. வகுப்புகளுக்கு பயிற்சி மேற்கொள்கின்ற நபர்கள் தருகின்ற தொகையினை யோகா சிறுமிகள் சேர்த்து வைத்துள்ளனர்.

    கட்டணத்தொகை

    கட்டணத்தொகை

    தொடர்ந்து வகுப்பில் சேர்க்கப்படுகின்ற கட்டண தொகையை யோகா தினத்தில் பிறந்து உலக சாம்பியன் பட்டம் விருது வென்ற அக்சத்தாவின் பிறந்த நாளில் கொரோனா நிவாரணத்துக்காக தருகின்றனர். யோகா வகுப்புகள் கொரோனா பேரிடர் முடிந்தாலும் யோகா வகுப்புகளை நடத்த சிறுமிகள் முடிவு செய்துள்ளனர்.

    பொது சேவை

    பொது சேவை

    இதன் மூலம் கிடைக்கும் கட்டணத்தை பொது சேவைக்காக பயன்படுத்தவுள்ளனர். சிறுமிகளின் மனித நேயத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். சிறிய வயதில் சமூகம் மீது இவர்கள் கொண்ட பொறுப்பு அளப்பறியது என்கிறார்கள் அவர்களிடம் யோகா பயில்வோர்.

    English summary
    Coimbatore girls teach yoga class for corona relief fund.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X