கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்குமே கிடைக்கல.. சரக்கு வாங்க முடியாத விரக்தி.. கோவையில் கூலித்தொழிலாளி விபரீத முடிவு

Google Oneindia Tamil News

கோவை: சரக்கு வாங்க முடியாத விரக்தியில் கூலித் தொழிலாளி ஒருவர் கோவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Recommended Video

    கொரோனா பீதி.. கேரளா ஸ்டைலில் தமிழகத்தில் மது விற்பனை - வீடியோ

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு காரணமாக இருபத்தொரு நாட்கள் மதுபான கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    Coimbatore man committed suicide due to can not buying liquor

    மார்ச் 24ஆம் தேதி மாலையுடன் மதுக்கடைகள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் எங்குமே இயங்கவில்லை. இதனால் குடிமகன்கள் மது அருந்த முடியாமல் விரக்தியில் இருக்கிறார்கள். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிஞ்சியை சேர்ந்தவர் சிவானந்தம். இவருக்கு வயது 55 ஆகிறது. இவர் தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர். 144 தடை உத்தரவு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது அருந்த முடியாமல் சிவானந்தம் தவித்து வந்தார்.

    கள்ளத்தனமாக சில இடங்களில் விற்பனை செய்யப்படும் நிலையில் அதிக விலை கொடுத்து மது வாங்க முடியவில்லை என்று நண்பர்களிடம் புலம்பி வந்திருக்கிறார்.

    1103 பேர்.. 8 கிமீக்கு கொரோனா கன்டெய்ன்மெண்ட் பிளான்.. இனி இதுதான் வேலை.. பீலா ராஜேஷ் செம திட்டம்! 1103 பேர்.. 8 கிமீக்கு கொரோனா கன்டெய்ன்மெண்ட் பிளான்.. இனி இதுதான் வேலை.. பீலா ராஜேஷ் செம திட்டம்!

    கடைகளை மூடிவிட்டு இப்படி அநியாய விலைக்கு விற்கிறார்களே, இதற்கு கடையை திறந்து வைத்திருக்கலாமே என்று சிவானந்தம் வேதனை அடைந்து இருக்கிறாராம்.

    நேற்று முன்தினம் மதுபாட்டில் தேடி அலைந்த சிவானந்தம், எங்குமே மது கிடைக்காத விரக்தியில் வீட்டுக்கு வந்தாராம். வீட்டுக்குள் சென்ற அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கோவை போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Coronavirus outbreak: Coimbatore man committed suicide due to can not buying liquor
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X