கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாட்ஸ்அப்பில் பலருடன் சாட்டிங் செய்த அலமேலு... மகனுக்கு விஷம் கொடுத்து தூக்கில் தொங்கிய அர்ஜூன்

பிற ஆண்களுடன் விடிய விடிய வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்த மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர் ஒருவர் மகனை கொன்று விட்டு தானும் தூக்கில் தொங்கியிருக்கிறார்.

Google Oneindia Tamil News

கோவை: ஸ்மார்ட்போன்கள் இன்றைக்கு பலரது வாழ்க்கையிலும் பிரச்சினை ஏற்பட காரணமாகிறது. கோவையில் பல ஆண்களுடன் விடிய விடிய வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்த மனைவியால் மன உளைச்சலுக்கு ஆளான டெய்லர் ஒருவர் தனது மகனுக்கு தேனில் சானிப்பவுடரில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதோடு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து உயிலை மாய்த்துக்கொண்ட நபரின் பெயர் அர்ஜூன், இவர் கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரத்தை சேர்ந்தவர். வீட்டிலேயே மிசின் வைத்து துணி தைத்து கொடுத்து வந்தார். இருவரின் மரணத்திற்குக் காரணம் மனைவியின் நடத்தையின் மீதான சந்தேகமே என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அர்ஜூனின் மனைவி அலமேலு ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கணவர் வீட்டில் இருக்க மனைவி வெளியில் வேலைக்கு சென்று வருவதிலேயே பிரச்சினை ஆரம்பித்தது. கணவரும், 13 வயதில் மகன் இருந்தாலும் அவர்களை கவனிக்காமல் விட்டதால் இன்றைக்கு
குடும்பமே சிதறி சின்னாபின்னமாகியுள்ளது.

நடுரோட்டில் வெட்டிய கும்பல்... ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரவுடி- புதுக்கோட்டையில் பயங்கரம் நடுரோட்டில் வெட்டிய கும்பல்... ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரவுடி- புதுக்கோட்டையில் பயங்கரம்

எமனான போன்

எமனான போன்

இன்றைக்கு பலரது வாழ்க்கையிலும் ஸ்மார்ட்போன்தான் எமனாகிறது. பேஸ்புக், வாட்ஸ்அப், டிக்டாக் என பல செயலிகள் குடும்பத்திற்குள் புகுந்து கும்மியடிக்கிறது. கோவையிலும் அலமேலுவின் வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்தான் பல வேலைகளை செய்துள்ளது. கணவன் டெய்லராக இருந்தாலும் வீட்டு செலவிற்கும் தனது செலவிற்கும் வேலைக்குப் போன அலமேலு தனக்காக ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினார்.

வாட்ஸ்அப்பில் சாட்டிங்

வாட்ஸ்அப்பில் சாட்டிங்

அலமேலுவிற்கு வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்வது ரொம்ப பிடிக்கும். வீட்டிற்கு வந்தும் வேலைகளைக்கூட சரியாக கவனிக்காமல் போனும் கையுமாக உட்காந்து விடுவாராம், இது கணவர் அர்ஜூனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை கண்டித்துள்ளார். பிள்ளையையும் தன்னையும் கவனிக்காமல் யாருடன் போனில் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார். அங்கே ஆரம்பித்தது சண்டை.

வாட்ஸ் அப்பில் சாட்டிங்

வாட்ஸ் அப்பில் சாட்டிங்

திங்கட்கிழமையன்று நள்ளிரவு தாண்டியும் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்துள்ளார் அலமேலு. அதைப்பார்த்து மன உளைச்சலுக்கு ஆளான அர்ஜூன் மனைவியுடன் சண்டை போட்டார். அலமேலு அதை கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் மனைவியின் போனை பார்த்த அர்ஜூன், அதிர்ச்சியடைந்தார். வாட்ஸ்அப் சாட்டிங்கில் பிற ஆண்களுடன் அவர் பேசிய அந்தரங்க பேச்சுக்கள் அவரது நடத்தையை உணர்த்தின.

தற்கொலை முடிவு

தற்கொலை முடிவு

இனியும் உயிர் வாழ்வதில்லை அர்த்தமில்லை என்று உணர்ந்த அர்ஜூன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மகனை விட்டு விட்டு போனால் அவன், அநாதையாகிவிடுவான் என்று நினைத்து அவனுக்கு தேனில் சாணிபவுடரை கலந்து கொடுத்தார். வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கினான். அதைப்பார்த்து அழுத அர்ஜூன் மனைவியின் சேலையை உத்தரத்தில் போட்டு தூக்கில் தொங்கினார்.

நடத்தையால் விபரீதம்

நடத்தையால் விபரீதம்

ஆணோ, பெண்ணோ தடம்மாறினால் குடும்பமே சிதறிப்போய் விடும் என்பதற்கு அலமேலுவின் கதையே உணர்த்துகிறது. இன்றைக்கு பலரும் டிக்டாக், பேஸ்புக், வாட்ஸ்அப்கே கதியாக கிடக்கின்றனர். குடும்பத்தை கவனிக்காமல் பிறரோடு சாட்டிங் செய்த மனைவியால் இரண்டு உயிர்களே பலியாகி விட்டதே என்று சிவானந்தபுரம் மக்கள் சோகத்தோடு பேசிக்கொள்கின்றனர்.

ஆபத்து உள்ளது

ஆபத்து உள்ளது

வாட்ஸ் அப் செயலியில் பரிமாறப்படும் ஒவ்வொரு தகவலும் சைபர் கிரைம் போலீசாரால் பார்க்க முடியும். அது ஒன்றும் ரகசியமானதல்ல. எனவே தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியை கள்ளத் தொடர்புக்காக பயன்படுத்துவதால் அதில் சந்தோசத்தை விட ஆபத்துதான் அதிகம் இருக்கிறது என்றும் காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.

English summary
A 46 year old man name Arjun sivananthapuram resident, murder his son to death by feeding honey with sani powder, hanging himself at his house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X