கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மார்ட்டின் கல்லூரி காசாளர் சாவில் சந்தேகம்.. கொலை செய்யப்பட்டதாக மகன் புகார்

Google Oneindia Tamil News

Recommended Video

    மார்ட்டின் வீட்டில் சோதனை.. கட்டிலுக்கு கீழே ரகசிய அறை- வீடியோ

    கோவை: மார்ட்டின் கல்லூரி காசாளர் சாவில் சந்தேகமுள்ளதாக அவரது மகன் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

    கோவையை சேர்ந்தவர் லாட்டரி மார்டின் என்ற தொழிலதிபர். மேற்கு வங்கம், அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி எழுதிய இளைஞன் என்ற திரைப்படத்தை இவர் தயாரித்திருந்தார்.

    நாடு முழுவதும் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் மார்ட்டின் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்தவர் பழனிச்சாமி.

    கையை அறுத்த பழனிச்சாமி

    கையை அறுத்த பழனிச்சாமி

    இவரது வீடு காரனோடையில் உள்ளது. இந்த நிலையில் இவரது வீட்டிலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தனது கையை பழனி அறுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    குட்டையில் சடலம்

    குட்டையில் சடலம்

    இதையடுத்து துடியலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழனிச்சாமி நேற்று விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் வெள்ளியங்காடு அருகே உள்ள மாநகராட்சி குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்துக்கு எதிரே உள்ள குட்டையிலிருந்து இவரது சடலம் மீட்கப்பட்டது.

    கொலை

    கொலை

    இந்த நிலையில் இன்று அவரது மகன் ரோஹின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பழனிச்சாமி தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரது தலையில் யாரோ பலமாக அடித்துள்ளனர்.

    சந்தேகம் இல்லை

    சந்தேகம் இல்லை

    தந்தையின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளேன். மார்டின் அலுவலகத்தில் என் தந்தையுடன் பணிபுரிந்த இருவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. தொழிலதிபர் மார்டின் மீது எனக்கு சந்தேகம் இல்லை.

    விசாரணை

    விசாரணை

    எங்கள் வீட்டுக்கு வந்த வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் என் தந்தையை அடித்தார் என பரபரப்பு புகாரை அளித்துள்ளார். ஆனால் வருமான வரித்துறையினரோ நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்த போதே பழனிச்சாமி காயத்துடன் வந்ததால் அதனால் அவரை விசாரணைக்கு நேற்று அழைக்கவில்லை.

    பரபரப்பு

    பரபரப்பு

    அவரது வீட்டிலிருந்து பல கோடிக்கு பரிவர்த்தனை செய்தது தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.

    English summary
    Coimbatore Martyn College staff not commits suicide. He was murdered by his co workers, his son claims and need re postmordem.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X