கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1.02 கிராமில் தங்கத்தினாலான ராமர் விக்கிரகம்.. கோவையை சேர்ந்த நுண்கலை ஆர்வலர் வடிவமைப்பு

Google Oneindia Tamil News

கோவை: 1.02 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் உயரத்தில் ராமர் சிலையை கோவை இளைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.

100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ராமர் கோயில் பிரச்சினை கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இன்றைய தினம் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 40 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கல்லை எடுத்துக் கொடுத்தார். இந்த கோயில் கட்டி முடிக்க 3 ஆண்டுகளாகும் என கூறப்படுகிறது.

ராமர் சிலையை அகற்ற நினைத்தவர்கள் இப்போ ஆதரிக்கிறார்கள்.. யோகி ஆதித்யநாத் காட்டம் ராமர் சிலையை அகற்ற நினைத்தவர்கள் இப்போ ஆதரிக்கிறார்கள்.. யோகி ஆதித்யநாத் காட்டம்

ஆர்வலர்

ஆர்வலர்

இந்த நிலையில் இன்று பூமிபூஜையையொட்டி கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 1.02 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் உயரத்தினாலான ராமர் சிலையை வடிவமைத்துள்ளார். கோவைச் சேர்ந்த நுண்கலை ஆர்வலரான மாரியப்பன்தான் இந்த சிலையை உருவாக்கியுள்ளார்.

சிறப்பு

சிறப்பு

இந்த சிலையை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு அவர் அனுப்பி வைக்க போவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் ராமர் கோயில் கட்டுமானம் என்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாளுக்காகத்தான் நாம் பல ஆண்டுகளாக காத்திருந்தோம்.

வரலாற்றுச்

வரலாற்றுச்

ஆனால் இன்று நமது கனவு நனவாகியுள்ளது. ஏதேனும் ஒரு வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்தால் அதன் நினைவாக தங்கத்தினாலான ஒரு சிறிய பொருளை உருவாக்குவதை நான் விரும்புவேன். அந்த வகையில் சிறிய ராமர் சிலையை உருவாக்கியுள்ளேன். இந்த நன்னாளை வரலாற்றில் எழுதுவதற்காகவே இந்த சிலையை செய்துள்ளேன் என்றார்.

உபி முதல்வர்

உபி முதல்வர்

இன்றைய ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் 175 பேர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத், மஹாந்த் நிருத்தியா கோபால்தாஸ் மகாராஜ், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பாட்டீல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

English summary
Coimbatore Miniature artist Mariappan makes Ram statue in 1.02 grams of gold ahead of Ram temple ground breaking ceremony.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X