கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவையில்.. 304 தூண்களுடன் தமிழகத்திலேயே மிக நீண்ட மேம்பாலம்.. பூமி பூஜை போட்டாச்சு

Google Oneindia Tamil News

கோவை: தமிழகத்திலேயே மிக நீண்ட உயர் மட்ட மேம்பாலம் கோவை அருகே அமைகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று அமைச்சர் வேலுமணி இந்த பால பணிகளை துவக்கி வைத்தார்.

Recommended Video

    கோவை: மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம்....பூமி பூஜை செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..!

    கோவை அடுத்த, அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

    1620 கோடி திட்ட மதிப்பு கொண்ட உயர்மட்ட மேம்பாலம் இதுவாகும். இந்த பாலத் திட்ட பணிகளுக்கு, பூமி பூஜை செய்து அமைச்சர் வேலுமணி பணிகளை துவக்கி வைத்தார்.

    நலத்திட்டங்கள்

    நலத்திட்டங்கள்

    கோவையிலிருந்து தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற 46 மாணவர்களுக்கு அமைச்சர் சான்றிதழ் வழங்கினார், மேலும் மொத்தம் 7 என்ற அளவிற்கான, புதிய 108 இலவச ஆம்புலன்ஸ் வாகன சேவைகளை துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் வேலுமணி.

    அவினாசி சாலையில் டிராபிக்

    அவினாசி சாலையில் டிராபிக்

    சேலம் மற்றும் அதற்கு அந்த பக்கம் உள்ள மாவட்டங்கள், திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களிலிருந்து, அவினாசி சாலை வழியாகத்தான் கோவைக்கு வருகின்றனர். திருமண நாள், முக்கிய நிகழ்வு காலகட்டங்களில் இங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்த மேம்பாலம் அந்த பிரச்சினையை தீர்க்கும்.

    எடப்பாடி பழனிச்சாமி

    எடப்பாடி பழனிச்சாமி

    100 கோடி மதிப்பீட்டில் கோவை அரசு மருத்துவமனைக்கு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு, பிரதான சாலைகளில் மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார் என்றார்.

    பாலத்தின் சிறப்பு

    பாலத்தின் சிறப்பு

    10.10 கி.மீ நீளம் கொண்ட இந்த மேம்பாலம், தமிழகத்திலேயே மிக நீளமானதாகும். மொத்தம் 304 தாங்கு தூண்கள் அமைக்கப்படுகிறது. அண்ணா சிலை சந்திப்பு, நவ இந்தியா, ஹோப்ஸ் கல்லூரி, பீளமேடு சர்வதேச விமான நிலைய பகுதிகளில் வாகனங்களில் ஏறி இறங்குவதற்கு வசதியாக சாய்வு தள பாதைகள் அமைக்கப்படுகின்றன.

    அடிக்கல் நாட்டல்

    அடிக்கல் நாட்டல்

    உயர்மட்டம் மேம்பாலத்திற்கு ரூ.1,620 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சென்னையில் இருந்தப்படி சமீபத்தில் காணொலி காட்சி மூலம், இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து விரைவில் பணியை தொடங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The longest high level flyover in Tamil Nadu is located near Coimbatore. Minister Velumani participated in the ceremony of inaugurations of the bridge work.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X