கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முத்து விலாஸ் மிட்டாய்க்கடையில் வேலை.. 35 லட்சம் மோசடி.. ஓனர் கைது

Google Oneindia Tamil News

Recommended Video

    முத்து விலாஸ் மிட்டாய்க்கடையில் வேலை.. 35 லட்சம் மோசடி

    கோவை : முத்து விலாஸ் மிட்டாய்க் கடையில் வேலை தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் 35 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அந்த நிறுவன உரிமையாளர் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கோவையில் நெல்லை முத்து விலாஸ் மிட்டாய்க் கடை என்ற பிரபல இனிப்பு கடையின் நிர்வாக இயக்குனராக இருப்பவர் பாலசந்திரன். இவர் தங்களது கிளை நிறுவனங்களில் பணிபுரிய ஆட்கள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார்.

    Coimbatore Muthuvilas mittai kadai owner arrest

    இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேர்காணலுக்குச் சென்றுள்ளனர். நேர்காணலுக்கு சென்றவர்களிடம் வேலைக்கு அமர்த்துவதுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் தலா 30 ஆயிரம் என 35 லட்ச ரூபாய் வரை பணத்தை பெற்றுக் கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

    தெரிஞ்சுடுச்சு.. தெரிஞ்சுடுச்சு.. மத்தியில் யார் ஆட்சின்னு தெரிஞ்சுடுச்சு.. ப.சிதம்பரம் கணிப்பு! தெரிஞ்சுடுச்சு.. தெரிஞ்சுடுச்சு.. மத்தியில் யார் ஆட்சின்னு தெரிஞ்சுடுச்சு.. ப.சிதம்பரம் கணிப்பு!

    பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டு பாலச்சந்திரனை நெருக்கடி செய்யவே, பாலச்சந்திரன் பணம் கொடுத்தவர்கள் தன்னை நெருக்கடி செய்து மிரட்டுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து இந்த புகாரின் பேரில் கோவை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நெல்லை முத்துவிலாஸ் மிட்டாய்கடை உரிமையாளர் பாலசந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    English summary
    Coimbatore Muthuvilas mittai kadai owner has been arrested for fradulent 35 lakhs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X