கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஸ்போர்ட்.. போலி வெப்சைட்கள் உங்கள் தகவலை திருடி.. கோவை பாஸ்போர்ட் அதிகாரி வார்னிங்

Google Oneindia Tamil News

கோவை: பாஸ்போர்ட் சேவை தருவதாக வரும் போலியான வெப்சைட்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பால்ரவீந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உடனே பாஸ்போர்ட் பெற்று தருவதாக பாஸ்போர்ட் இணையதளத்தை போன்று போலியான இணைதள முகவரியில் பல வெப்சைட்கள் இயங்குகின்றன.

Coimbatore Passport Officer Alert on Fake Websites related to Passport Services

இது தொடர்பாக மத்திய அரசு அண்மையில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், பல மோசடி வலைத்தளங்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகள் விண்ணப்பதாரர்களிடமிருந்து தரவை சேகரித்து வருகிறது.

ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கும் பாஸ்போர்ட் மற்றும் தொடர்புடைய சேவைகளுக்கான நியமனத்தை திட்டமிடுவதற்கும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அமைச்சின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த போலி வலைத்தளங்களில் சில * .org, * .in, * .com போன்ற டொமைன் பெயரில் www.indiapassport.org, www.online-passportindia.com, www.passportindiaportal.in, www.passport-india போன்றவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. www.passport-seva.in, www.applypassport.org மற்றும் சிறிய எழுத்து மாற்றங்களுடன் பாஸ்போர்ட் எடுத்து தருவதாக வலைத்தளங்கள் இயங்குகின்றன

எனவே இந்திய பாஸ்போர்ட் மற்றும் தொடர்புடைய சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் அவர்கள் மேற்கூறிய மோசடி வலைத்தளங்களுக்குச் வேண்டாம். அத்துடன் பாஸ்போர்ட் சேவைகள் தொடர்பான கட்டணம் செலுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பாஸ்போர்ட் சேவைகளைப் பயன்படுத்துவதற்காக இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்- www.passportindia.gov.in. மட்டுமே.

Coimbatore Passport Officer Alert on Fake Websites related to Passport Services

இதேபோல் விண்ணப்பதாரர்கள் அண்ட்ராய்டு மற்றும் iOS பயன்பாட்டு தளங்களில் பதிவிறக்கம் செய்யக்கூடிய அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் mPassport சேவாவையும் பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தது.

கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பால்ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதே கருத்தையே கூறியிருந்தார். அவர் தனது பதிவில், https://www.passportonlineindia.com போன்ற பெயர்களில் போலியான வலைதளங்களில் இயங்கி வருகின்றன. எனவே பொய்யான வலைத்தளங்களுக்கு இரையாகி வேண்டாம. அந்த இணையதளங்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து தவறாக பயன்படுத்தக்கூடும். இவற்றால் நீங்கள் பணத்தை இழப்பதைத் தவிர தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தார்.

English summary
Coimbatore Passport Officer K Palravindran warned public not to fall prey to fake websites, which could result in compromising their own personal information, which may be misused apart from losing money. Official website: http://passportindia.gov.in
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X