கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவையில் கோவில்கள் முன்பு டயர்கள் எரிப்பு- சிசிடிவியில் சிக்கிய சேலம் கஜேந்திரன் போலீசாரால் கைது

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் கோவில்கள் முன்பு டயர்களை எரிக்கப்பட்டும் சூலாயுதம் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டது என புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சிசிடிவி கேமரா பதிவில் சிக்கிய சேலம் கஜேந்திரனை போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கோவையில் தந்தை பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டது. இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.

Coimbatore Police identify men who damage Temples

இதனைத் தொடர்ந்து பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் போலீசில் சரணடைந்தார். இந்த நிலையில் கோவையில் 3 கோவில்களின் முன்பாக டயர்கள் எரிக்கப்பட்டு சூலாயுதம் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதனை கண்டித்து இந்து அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், கோவில்களில் நாசம் விளைவித்த நபர் சேலத்தை சேர்ந்த கஜேந்திரன் என தெரியவந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டில் குடும்பத்தினருடன் சண்டை போட்ட கோபத்தில் வெளியே வந்க கஜேந்திரன் இன்னமும் வீடு திரும்பவில்லை என்கின்றனர் அவரது பெற்றோர்.

Coimbatore Police identify men who damage Temples

Recommended Video

    Periyar சிலைக்கு காவிப்பூச்சு : கொந்தளித்த தலைவர்கள்

    அத்துடன் கஜேந்திரனுக்கு எந்த ஒரு இயக்கத்துடனும் தொடர்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜேந்திரன் மொபைல் போனை பயன்படுத்துவது இல்லை என்பதால் அவரை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்தது.

    சிசிடிவியில் சிக்கிய கஜேந்திரன் இன்று மாலை அவிநாசி அருகே கைது போலீசார் செய்யப்பட்டார். கைதான நபர் எந்தவொரு அமைப்பையோ அல்லது கட்சியையோ சாராதவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Coimbatore Police identified men who damage Temples.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X