கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

6 வயது கோவை சிறுமியை கொடூரமாக சீரழித்து கொன்ற சந்தோஷுக்கு தூக்கு.. போக்சோ கோர்ட் அதிரடி

6 வயது சிறுமியை சீரழித்த சந்தோஷ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    பாலியல் இச்சை உடையவனை எவ்வாறு அடையாளம் காணலாம்? | Good Touch & Bad Touch

    கோவை: 6 வயது குழந்தையின் கை, கால்களை துணியால் கட்டி.. பலாத்காரம் செய்த கொடூரன் சந்தோஷ்குமாரை குற்றவாளி என கோவை மகளிர் கோர்ட் அறிவித்துள்ளதுடன், தூக்கு தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

    கோவை துடியலூர் அடுத்த பன்னீர்மடை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி அவள்.. 1-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள்.. போன மார்ச் 25-ம் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தவளை திடீரென காணோம்..

    இதனால் பதறி போன பெற்றோர் துடியலூர் போலீசில் புகார் செய்யவும், தேடுதல் வேட்டை தீவிரமானது. அடுத்தநாளே வீட்டின் பின்பக்கம் ஒரு துணியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தாள் சிறுமி.

    போஸ்ட் மார்ட்டம்

    போஸ்ட் மார்ட்டம்

    இது சம்பந்தமாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி நிலையில்தான், சந்தோஷ்குமார் என்பவன் சிக்கினான்.. மார்ச் 31-ம் தேதி சந்தோஷ்குமாரை போலீஸார் கைது செய்தனர். உளியம்பாளையத்தை சேர்ந்தவன் இவன்.. 32 வயதாகிறது.. பாலியல் பலாத்காரம், கொலை தடயங்களை மறைத்தல், போக்சோ என 4 பிரிவில் போலீசார் கைது செய்தனர்.

    சாட்சிகள்

    சாட்சிகள்

    இதுதொடர்பான வழக்கும் கோவை மகளிர் கோர்ட்டில் நீதிபதி ராதிகா முன்னிலையில் நடந்து வந்தது.. இரு தரப்பின் இறுதி வாதங்களும் நேற்று முடிவடைந்தது.. அரசு தரப்பில், 26 சாட்சிகளும், எதிர் தரப்பில் ஆறு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். அதனால் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    திடீர் திருப்பம்

    திடீர் திருப்பம்

    இந்த நிலையில், திடீர் திருப்பமாக இந்த வழக்கில் இன்னொருவருக்கும் தொடர்பு இருப்பதாக சிறுமியின் தாய் வனிதா கோர்ட்டில் மனு அளித்தார். வழக்கை மறுவிசாரணை நடத்தி, இன்னொரு குற்றவாளியையும் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும், டிஎன்ஏ ஆய்வு முடிவுகளை மேற்கோள்கட்டி இந்த வழக்கில் கூடுதலாக பெண் அதிகாரி நியமனம் செய்து திரும்பவும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    எனினும் இறுதி வாதங்கள் முடிந்த நிலையில், இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. சந்தோஷ்குமார் குற்றவாளி என கூறி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும் சந்தோஷ்குமார் தண்டனை குறித்து 3 மணியளவில் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் சொல்லி இருந்தனர். இதைதவிர மேலும் சிறுமியின் தாய் நேற்று தந்த புகார் மனு தொடர்பாகவும் தொடர்ந்த வழக்கு விசாரணையும் நடந்து வந்தது.

    தூக்கு தண்டனை

    தூக்கு தண்டனை

    பிற்பகலுக்கு பிறகு தீர்ப்பு என்பதால் காலையில் இருந்தே ஒருவித பரபரப்பு சூழல் ஏற்பட்டது. அதன்படியே உணவு இடைவேளை முடிந்து 3 மணியளவில் மீண்டும் கோர்ட் கூடியது.. சந்தோஷ்குமாருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் , 302 பிரிவின் கீழ் குற்றவாளி தூக்கு தண்டனையும் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    English summary
    6 year old child sexual harassment case and coimbatore mahila court verdict today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X