கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

51 வயசாகுது.. "கேஸ் போட வேணாம் ஸார்".. கெஞ்சிய உஷா.. கையும் களவுமாக சிக்கி.. கோவை ஷாக்..!

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

கோவை: 51 வயசு உஷா செய்த காரியத்தை பார்த்தீங்களா.. ஒரு அதிகாரி என்றுகூட பார்க்கவில்லையே, அவரை போலீஸ் தூக்கி உள்ளே வைத்துவிட்டது!

கோவை டவுன்ஹாலில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் முறைகேடு நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துகொண்டேஇருந்தது. பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு இவர் லஞ்சம் பெறுவதாக புகார்களும் எழுந்தன.

Coimbatore Primary education office anti corruption dept files case against Woman Officer

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அந்த ஆபீசில் அதிரடி சோதனை நடத்தினர்... அப்போது சிக்கியவர்தான் கோவை முதன்மை கல்வி அலுவலரான உஷா.. 51 வயசாகிறது..

இவருக்கு ஒரு பி.ஏ.. அவரது நேர்முக உதவியாளர்.. பெயர் பாலன்.. 53 வயசாகிறது.. இவர்கள் 2 பேரிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டபோதுதான், இவ்வளவு காலம் செய்துவந்த தில்லாலங்கடி வேலை தெரிந்தது..

அதாவது, தனியார் பள்ளிகளில் ஆய்வுக்கு செல்வாராம் உஷா.. அங்கு ஆய்வில் குறைபாடுகளை கண்டறிந்து அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மிரட்டுவாராம்.. உடனே பயந்துபோன அந்த தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள், பணம் தர முன் வருவார்களாம்.. அப்படித்தான் கொள்ளை அடித்து வைத்திருக்கிறார் உஷா. அதுமட்டுமல்ல, ஒரு ஸ்கூல் சரியாகவே இயங்கினாலும், அதுக்கு ஏதாவது ஒரு சாக்கு சொல்லி ஃபைன் போட்டுவிடுவாராம்.

இப்போது உஷாவிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. மேலும் எந்தெந்த தனியார் மெட்ரிக் பள்ளியில் எவ்வளவு ரூபாய் புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கினார்கள்? என்ற விபரமும் சிக்கி உள்ளது.. முறையாக இயங்கினாலும் ஒரு முறை ஆய்விற்கு சென்றால் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பேன்.'' என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பணம் தராத பாட்டியை கத்தியால் குத்திக் கொன்ற பேரன்! புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பணம் தராத பாட்டியை கத்தியால் குத்திக் கொன்ற பேரன்!

கொரோனா பரவல் விதிமுறையை மீறிய பள்ளிகளில் ஆய்வு நடத்தியே இந்த முதன்மை கல்வி அலுவலர் பல லட்சம் ரூபாய் வசூல் வேட்டை நடத்தி வந்துள்ளதும் கண்டறியப்பட்டது... பணம் வாங்கி கொண்டு பல்வேறு முறைகேடுகளை கண்டுகொள்ளாமலும் இருந்துள்ளார் உஷா..

இவ்வளவும் கையும் களவுமாக மாட்டி கொண்டதால், "கேஸ் எதுவும் போடவேண்டாம் ஸார்" என்று கதறி இருக்கிறார்.. ஆனாலும் போலீசார் உஷாவை கைது செய்துள்ளனர்.. பாலன் மீதும் வழக்குப்பதிந்துள்ளனர். தொடர்ந்து உஷாவின் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

English summary
Coimbatore Primary education office anti corruption dept files case against Woman Officer
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X