கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொண்டையில் சிக்கிய பழம்! உயிருக்கு போராடிய காவலர்! சப்-இன்ஸ்பெக்டர் செய்த நெகிழ்ச்சி செயலை பாருங்க!

Google Oneindia Tamil News

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உணவருந்தி கொண்டிருந்த பொழுது தொண்டையில் சிக்கி முலாம் பழத்தால் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், துரிதமாக செயல்பட்டு அவருக்கு முதலுதவி செய்து காவலரின் உயிரை காப்பாற்றிய சார்பு ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Recommended Video

    கோவை: காவலர் தொண்டையில் சிக்கிய உணவு… துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய எஸ்ஐ!

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர், துணைதலைவரோடு, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் போது நகராட்சி நிர்வாகத்தினர், அதிமுக கவுன்சிலர்களின் ஒப்புதல் இல்லாமல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து கவுன்சிலர்கள் இரு நாட்களாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வடமாநிலத்தவருக்கு இன்னர் லைன் பெர்மிட் அமல்படுத்தி இருந்தால் ராமேஸ்வர சம்பவம் நடந்திருக்காது- சீமான் வடமாநிலத்தவருக்கு இன்னர் லைன் பெர்மிட் அமல்படுத்தி இருந்தால் ராமேஸ்வர சம்பவம் நடந்திருக்காது- சீமான்

    அதிமுக போராட்டம்

    அதிமுக போராட்டம்

    இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டதோடு, மோதல் ஏற்படும் நிலை உருவாகியது. கட்சியினரும் அங்கு குவிந்ததால், மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவலர்கள் மதிய வேளையில் உணவருந்தி கொண்டிருந்தனர்.

    சிக்கிய முலாம் பழம்

    சிக்கிய முலாம் பழம்

    அப்போது அபுதாஹீர் என்ற காவலரும் உணவருந்தி கொண்டிருந்தார்.அப்போது, அருகிலிருந்த மற்றொரு காவலர் அவருக்கு முலாம் பழத்தை கொடுத்துள்ளார். அப்போது மூத்த அதிகாரி அழைத்ததால் அவசர அவசரமாக அதனை அபுதாகிர் சாப்பிட்ட போது முலாம் பழம் தொண்டையில் சிக்கி கொண்டது. இதனால் அவர் சற்றுநேரத்தில் மூச்சு விட திணறினார்.

    மூச்சு திணறல்

    மூச்சு திணறல்

    இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் தாமோதரன் உணவுப்பொருள் தொண்டையில் சிக்கி மூச்சு விட திணறிய காவலருக்கு சற்றும் தாமதிக்காமல் முதலுதவி சிகிச்சையளித்து காவலரின் உயிரை காப்பாற்றினார்.

    சிசிடிவி காட்சிகள்

    சிசிடிவி காட்சிகள்

    இச்சம்பவம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது படு வைரலாகி வருகிறது. ஆபத்து என்றதும் சற்றும் தாமதிக்காமல் முதலுதவி செய்து சக காவலரின் உயிரை காப்பாற்றிய இச்செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Praises heaped on a sub inspector who acted swiftly and saved the life of a policeman who suffocated while eating at Mettupalayam in Coimbatore district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X