கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜே.இ.இ, நுழைவுத்தேர்வில் கோவை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2 பேர் தேர்ச்சி

Google Oneindia Tamil News

கோவை: ஜே.இ.இ. நுழைவுத்தேர்வில் கோவை காரமடை அருகே வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பபள்ளி மாணவிகள் 2 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி போன்றவற்றில் சேர்ந்து படிப்பதற்கு ஆண்டுதோறும் ஜே.இ.இ. என்று அழைக்கப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

 coimbatore two government school students passed jee entrance exam

இந்த ஆண்டு முதல் மெயின் முதல் தேர்வு, மெயின் 2வது தேர்வு என இரண்டு முறை தேர்வுகள் கடந்த மாதம் நடந்தது. இந்த இரு தேர்வுகளையும் எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளிங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த சபிதா, ஷாலினி ஆகிய இரு மாணவிகள் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் சபிதா பழங்குடியின மாணவி ஆவார்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்து கலக்கிய ஈரோடு.. கடைசிக்கு சென்ற வேலூர்! பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்து கலக்கிய ஈரோடு.. கடைசிக்கு சென்ற வேலூர்!

இந்த தேர்வில் பழங்குடியின மாணவி வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் வெற்றி பெற்றால் ஐஐடி, என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வெற்றி பெற்ற இரண்டு மாணவிகளுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

English summary
coimbatore karamadi Velliangadu government school 2 girl students passed jee entrance exam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X