கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடங்காத புவனேஸ்வரி.. ஆம்புலன்சுக்குள்ளேயே அட்டகாசம்.. அதிர்ந்து போன கோவை போலீஸ்..!

வாடகைதாரர்களிடம் தகராறு செய்த பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

கோவை: ஆம்புலன்சுக்குள்ளேயே ஏறி உட்கார்ந்து அட்டகாசம் செய்துள்ளார் புவனேஸ்வரி.. இவரது அலப்பறைகளை கண்டு கோவை போலீசாரே மிரண்டுவிட்டனர்.

கோவை வெள்ளக்கிணர் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி.. இவருக்கு சொந்தமாக கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார்.. அதில் ஒரு கடையில் லட்சுமி என்பவர் மளிகை கடை நடத்தி வந்தார்.. 3 மாதமாக இந்த கடை நடத்தி வருகிறார்.

Coimbatore woman attacked three, due to rental issue

ஆனால், 40 நாட்களிலேயே லட்சுமியை திடீரென கடையை காலி செய்ய சொல்லி புவனேஸ்வரி சொன்னாராம்.. ஆனால் லட்சுமி மறுத்து, இது சம்பந்தமாக கோர்ட்டுக்கும் சென்றுள்ளார்.. கோர்ட்டில் கடையை காலி செய்ய ஸ்டே வாங்கி வந்துவிட்டார்.

இது புவனேஸ்வரிக்கு மேலும் ஆத்திரத்தை தந்தது.. அதனால், சம்பவத்தன்று விடிகாலை ஒரு மணிக்கு புவனேஸ்வரி லட்சுமியின் கடைக்கு தனது ஆட்களை அழைத்து சென்றார்.. பூட்டை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு போய்விட்டார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி துடியலூர் போலீசில் புகார் அளித்தார்.

இதனால் மேலும் டென்ஷன் ஆன புவனேஸ்வரி, தன்னுடைய பில்ட்டிங்கையே இடித்து தள்ள முடிவெடுத்தார்.. ஜேபிசி மிஷினை கொண்டு வந்து, லட்சுமி வாடகைக்கு இருந்த பில்டிங்கை இடிக்க ஆரம்பித்தார்.. அதை தடுக்க வந்த லட்சுமி உள்ளிட்ட 3 பேரையும் அடித்து தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் லட்சுமியும், அவரது சகோதரி, மற்றும் ஊழியர் ராஜசேகரன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதனால், அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.. ஆனால், காயமடைந்தவர்களுக்கு முந்தி புவனேஸ்வரி அந்த ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டு, நெஞ்சு வலிக்கிறது என்று ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இறங்க சொல்லியும், இறங்கவே இல்லை.

அடம் பிடித்து கொண்டே ஆம்புலன்ஸில் அலப்பறை தந்து உட்கார்ந்திருந்தார்.. அதற்கு பிறகு, போலீசார் விரைந்து வந்து புவனேஸ்வரியை கீழே இறக்கிவிட்டு காயமடைந்த 3 பேரையும் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.. இப்போது புவனேஸ்வரியிடம் விசாரணை நடந்து வருகிறதாம்.

English summary
Coimbatore woman attacked three, due to rental issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X