கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏ நாங்கதான் கெத்து!.. ஏ அடங்கு! வி ஆர் தி பெஸ்ட்!.. கல்லூரி மாணவர்களுக்கிடையே தகராறு.. மாணவர் கொலை

Google Oneindia Tamil News

Recommended Video

    கல்லூரி மாணவர்களுக்கிடையே தகராறு... ஒருவர் கொலை-வீடியோ

    கோவை: கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டியில் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை அடுத்த மலுமிச்சம்பட்டி பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த அஷ்ரப் என்ற மாணவன் புதன்கிழமை காலை, வழக்கம்போல் கல்லுாரிக்கு வந்தார். அப்போது மாணவர் தினகரன் அஷ்ரப்பிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதில் திடீரென தினகரன் தன்னிடம் இருந்த கத்தியால் அஷ்ரப்பின் தோளிலும் மார்பிலும் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அஷ்ரப்பை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஷ்ரப் உயிரிழந்தார்

    மாணவர்கள் கைது

    மாணவர்கள் கைது

    இந்த விவகாரத்தில் தினகரன், சரவணக்குமார், நிதீஷ்குமார் ஆகியோர் அஷ்ரப்பைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். போலீஸாரிடம் மூவரும் அளித்த வாக்குமூலங்கள் பகீர் கிளப்புகின்றன. போலீஸாரிடம் மாணவர்கள் கூறுகையில், மலுமிச்சம்பட்டி பகுதியில் ஒரே வளாகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

    தன்னாட்சி கல்லூரி

    தன்னாட்சி கல்லூரி

    அந்த வளாகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்டு இயங்கும் ஒரு தன்னாட்சி கல்லூரியும் உள்ளது. இந்த இரு கல்லூரிகளிலும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் கொலை செய்யப்பட்ட அஷ்ரப் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் தன்னாட்சிக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள்.

    கல்லூரி

    கல்லூரி

    கைது செய்யப்பட்ட தினகரன், சரவணக்குமார், நிதீஷ்குமார் ஆகியோர் அண்ணா பல்கலையின் கீழ் வரும் கல்லூரியில் படித்து வந்தனர். இவர்கள் மூவரும் அஷ்ரப்பிடம் தங்களது கல்லூரிதான் சிறந்தது என அடிக்கடி கூறி வந்தனர். இதுபோல் திங்கள்கிழமை காலை அஷ்ரப்பும் அவரது நண்பர்களும் கல்லூரி வளாகத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

    மிரட்டல்

    மிரட்டல்

    அப்போது தினகரன் உள்பட 3 பேரும் அஷ்ரப் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதேபோல் தொடர்ந்து எங்களிடம் தகராறில் ஈடுபட்டால் கல்லூரி நிர்வாகத்திடம் கூறிவிடுவேன் என அஷ்ரப் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினகரன் உள்பட அந்த 3 பேரும் அஷ்ரப்பை அடித்துக் கீழே தள்ளி மிதித்து கத்தியால் குத்தி கொலை செய்ததை கேட்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

    English summary
    Two different colleges which located in same campus quarrel each other quoting our college is best. This results 3 students murder one student in Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X