கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆன்லைன் வகுப்பு, விநாயகருக்கு மாஸ்க் , கூடவே வெங்காயம்.... களைகட்டிய கடைசி நாள் நவராத்திரி..!

Google Oneindia Tamil News

கோவை: நவராத்திரி விழாவின் கடைசி நாளான இன்று ஆன்லைன் வகுப்பு பொம்மைகள், கொரானா ஒழிய வேண்டி விநாயகருக்கு முகக் கவசம், வெங்காயத்தின் விலை குறைந்து அனைவருக்கும் எளிதாக கிடைக்க வேண்டி கொலு பொம்மைகளுடன் வெங்காயத்தை படையல் வைத்து கோவையில் வழிபாடு நடத்தப்பட்டது.

Recommended Video

    ஆன்லைன் வகுப்பு, விநாயகருக்கு மாஸ்க் , கூடவே வெங்காயம்.... களைகட்டிய கடைசி நாள் நவராத்திரி..!

    நவராத்திரி விழாவின் போது பெரும்பாலானோர் வீட்டில் 9 நாட்கள் கொலு பொம்மைகள் வைத்து விரதமிருந்து துர்க்கை, சரஸ்வதி மற்றும் லட்சுமியை வழிபடுவது வழக்கம். தமிழ் மாதம் புரட்டாசியில் ஆரம்பித்து ஐப்பசி மாதம் வரை தொடர்ந்து 9 நாட்கள் வெகு விமரிசையாக இந்த நவராத்திரி விழா கொண்டாடபட்டு வருகிறது.

    இந்த 9 நாட்களில் ஒவ்வொரு நாட்களும் நடன நிகழ்ச்சி, இசை பஜனை நிகழ்ச்சி, படையல் விருந்து உள்ளிட்டவைகளை செய்து வழிபாடு செய்கின்றனர். மேலும் பரண் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் இந்த நவராத்திரி விழாவில் வீட்டை அலங்கரிக்கும்.

    ராமர்கோயிலை மிஞ்சும் வகையில்... பீகாரில் சீதா கோயில் கட்டவேண்டும்... சிராக் பாஸ்வான் விருப்பம்..!ராமர்கோயிலை மிஞ்சும் வகையில்... பீகாரில் சீதா கோயில் கட்டவேண்டும்... சிராக் பாஸ்வான் விருப்பம்..!

    நவராத்திரி திருவிழா

    நவராத்திரி திருவிழா

    தசரா மற்றும் நவராத்திரித் திருவிழாவில் கொலு பொம்மைகள் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்தக் கொலு பொம்மை வைக்கும் பண்பாடு ஒரு தலைமுறையிடம் இருந்து அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. பாரம்பரிய முறையிலான கொலு பொம்மைகள் என்பதைக் கடந்து, இப்போது நவீன காலத்துக்கு ஏற்ற கருத்தாக்கத்தின் அடிப்படையிலும் வைக்கப்படுகிறது.

    பொம்மைகள்

    பொம்மைகள்

    பெரும்பாலான வீடுகளில் பாரம்பரிய முறையில்தான் கொலு பொம்மைகள் வைக்கப்படுகின்றன. ஆனால் இன்று கடைசி நாளாக கொண்டாடப்படும் கொலு பொம்மைகள் விழாவில் கோவை டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் இக்கால கட்டத்திற்கு ஏற்ப முதன்முறையாக கொரோனா ஒழிய வேண்டும் என பிராத்தனை செய்து விநாயகருக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டது.

    தங்கம் விலை

    தங்கம் விலை

    குழந்தைகளின் ஆன்லைன் வகுப்பு கஷ்டங்கள் உள்ளிட்ட பொம்மைகள், விவசாயம் மேன்மையடைய வேண்டும் என்பதை விளக்கும் பொம்மைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன. தற்போது நாடு முழுவதும் வெங்காயத்தின் தட்டுப்பாடு காரணமாக வெங்காயத்தின் விலை என்பது தங்கத்தின் விலையை போன்று உயர்ந்து வருகிறது.

    சிறப்பம்சம்

    சிறப்பம்சம்

    இந்நிலையில் வெங்காயத்தின் விலை குறைந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்க வேண்டி கொலு பொம்மைகளுக்கு வெங்காயத்தை படையல் வைத்து வழிபட்டுள்ளது இந்த ஆண்டின் சிறப்பம்சம். மேலும் ராவணன் தர்பார், மகாபாரத சட்ட சபை, ராமாயண கதை, பண்டைய கால விவசாயம், கலை, பண்பாடு, தொழில்கள் குறித்து விளக்கும் கொலு பொம்மைகள் பார்ப்போர் மனதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    9 நாளும் கொண்டாட்டம்

    9 நாளும் கொண்டாட்டம்

    இதனை தொடர்ந்து சிறுமியர் மற்றும் பெண்கள் லட்சுமி மற்றும் சரஸ்வதியை வழிபடும் விதமாக பஜனை பாடல்கள் பாடினர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் என யாரையும் சந்திக்க முடியாத நிலையில் இந்த நவராத்திரி விழாவின் 9 நாளிலும் சுற்றத்தார் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடியது மகழ்ச்சியினை அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

    English summary
    Navratri festival 2020: Mask Vinayagar to Onion, main theme in Coimbatore golu festival.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X